நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   759
Zoom In NormalZoom Out


நிரல்நிறை தானே
வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச்
சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல்.
இது, நிறுத்தமுறையானே நிரல்நிறை கூறுகின்றது. 

(இ-ள்.) யாவது,  வினையினும்  பெயரினும்  நினையத்  தோன்றி -
வினையானும்  பெயரானும்  ஆராயத் தோன்றி, சொல் வேறு நிலைஇப்
பொருள்   வேறு   நிலையல்  -  முடிக்கப்படுஞ்  சொல்லும்  வேறே
நிலைபெற்று முடிக்குஞ் சொல்லும் வேறே நிற்றலாம். எ-று. 

தொடர்மொழிப்  பொருள்    முடிக்குஞ்    சொற்கண்ணதாகலான்,
முடிக்குஞ் சொல்லைப் பொருள் என்றார். 

‘வினையினும்     பெயரினும்’ என்றதனான்,    வினைச்சொல்லான்
வருவதூஉம்  பெயர்ச்சொல்லான்  வருவதூஉம்  அவ்விரு  சொல்லான்
வருவதூஉம் என நிரல்நிறை மூன்றாம். 

(எ-டு.) ‘மாசு போகவும் காய்பசி நீங்கவும், கடிபுனல் மூழ்கி அடிசில்
கைதொட்டு’  என்புழி,  முடிவனவும்  முடிப்பனவுமாகிய வினைச்சொல்
வேறு  வேறு  நிற்றலின்  வினை நிரல்நிறை. ‘கொடிகுவளை கொட்டை
நுசுப்புண்கண்    மேனி’    என    முடிவனவும்   முடிப்பனவுமாகிய
பெயர்ச்சொல் வேறுவேறு நிற்றலின், பெயர் நிரல் நிறை. 

‘உடலும் உடைந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும்
கடல்இருள் ஆம்பல்பாம் பென்ற-கெடலருஞ்சீர்த்
திங்கள் திருமுகமாச் செத்து.’ 

என்புழி, முடிவனவாகிய   பெயரும்   முடிப்பனவாகிய   வினையும்
வேறுவேறு நிற்றலின் பொது நிரல் நிறை. 

நினைய என்றதனாற் சொல்லும் பொருளும் நிரல்பட நில்லாது, 

‘களிறும் கந்தும் போல நளிகடற்
கூம்பும் கலனும் தோன்றும்’
என மயங்கி வருதலுங்கொள்க.                    (9)  

சுண்ணப் பொருள்கோள்

406. சுண்ணந் தானே
பட்டாங் கமைந்த ஈரடி எண்சீர்
ஒட்டுவழி அறிந்து துணித்தனர் இயற்றல். 

இது, சுண்ணம் ஆமாறு கூறுகின்றது. 

(இ-ள்.)   சுண்ணந்தானே-சுண்ணமாவது, பட்டாங்கு அமைந்த ஈரடி
எண்சீர்  -  இயல்பாக  அமைந்த  ஈரடிக்கண்  உளவாகிய எண்சீரை,
துணித்