நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   760
Zoom In NormalZoom Out


தனர் ஒட்டுவழி  அறிந்து  இயற்றல் -துணித்து இயையும்வழி
அறிந்து கூட்டி இயற்றப்படுவதாம், எ-று. 

ஈரடி  எண்சீர் அளவடி அல்லா விகார அடியானும் பெறப்படுதலின்
அவற்றை     நீக்குதற்கு    ‘அளவடியான்    அமைந்த’    என்பார்,
‘பட்டாங்கமைந்த ஈரடி’ என்றார். 

(எ-டு)

‘சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய

யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப

கானக நாடன் சுனை’ 

சுரை  மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து எனத்
துணித்துக்   கூட்ட  இயையும்.  சுண்ணம்போலச் சிதர்ந்து கிடத்தலின்,
சுண்ணம் ஆயிற்று. இதனுள், ஆழ அம்மி, நீத்து முயற்கு என ஒட்டிப்
பொருள்  தந்து நின்றனவேனும், சுரைக்கும் யானைக்குஞ் சொன்முடிபு
நோக்குப்பட நின்று பொருளுணர்த்தாமையின், மாற வேண்டிற்று.  (10) 

அடிமறிப் பொருள்கோள்

407. அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து
சீர்நிலை திரியாது தடுமா றும்மே. 

இஃது, அடிமறி ஆமாறு கூறுகின்றது. 

(இ-ள்.) அடிமறிச் செய்தி-அடிமறி என்பதன் செய்தி, சீர் நிலை திரி
யாது  அடி  நிலை  திரிந்து  தடுமாறும்-சீர் நின்றாங்கு நிற்ப  அடிகள்
தத்தம்   நிலையின்  திரிந்து  ஒன்றன்நிலைக்களத்து  ஒன்று   சென்று
நிற்கும், எ-று. 

(எ-டு.)

‘மாறாக் காதலர் மலைமறந் தனரே;
ஆறாக் கட்பனி வரலா னாவே;
கூறா மென்றோள் வளைநெகி ழும்மே;
கூறாய் தோழி! யான் வாழு மாறே.’ 

இது சீரும் பொருளும் திரியாது,  அடி  திரிந்தவாறு  காண்க.  இது
நான்கடிச் செய்யுட்கல்லது பெரும்பான்மை வாராது.        (11) 

மேலதற்கு ஒரு புறனடை

408. பொருள்தெரி மருங்கின்
ஈற்றடி இறுசீர் எருத்துவயின் திரியும்
தோற்றமும் வரையார் அடிமறி யான. 

இது, மேலதற்கு ஒரு புறனடை. 

(இ-ள்.) அடிமறியான - அவ்வடிமறிச் செய்யுளிடத்து, பொருள் தெரி
மருங்கின்   -   பொருள்  முடிவை  ஆராயுமிடத்து,  ஈற்று  அடி  -
அப்பொருள்  முடிவினை  உடைய  அடியில், எருத்துவயின் இறுசீர் -
முடிக்கின்ற   சீர்க்கு   முதற்சீரிடத்துப்  பொருளே  தன்  பொருளாய்
இறும்சீர், திரியும் தோற்றமும் வரையார்-ஏனை அடிகள் போல நேராய்
முடியாது மீண்டுசென்று மு