|
ன் நின்றதொரு சொல்லோடே பொருள்முடியுந் தோற்றரவும் நீக்கார்
ஆசிரியர். எ-று.
‘கூறாய் தோழி! யான் வாழு மாறே.’ என்பது, யாண்டு நிற்பினும்
பாட்டின் பொருள் முடிக்கின்ற அடி அதில் வாழும் என்பது, எருத்துச்
சீர், மாறு என்னும் இடைச்சொல்லாகிய இறுதிச் சீர் தான் பிரிந்து
நின்று உணர்த்துதற்குத் தனக்கு ஒரு பொருள் இன்றி வாழும்படியை
என எருத்துச்சீரின் பொருளையே உணர்த்தி, உருபை ஏற்றுக் கூறாய்
என முன் நின்ற சொல்லொடு முடிந்தவாறு காண்க.
உம்மையான், இங்ஙனம் முடிதல் சிறுபான்மை ஆயிற்று.
(12)
மொழிமாற்றுப் பொருள்கோள்
409. மொழிமாற் றியற்கை
சொல்நிலை மாற்றிப் பொருள்எதிர் இயைய
முன்னும் பின்னும் கொள்வழிக் கொளாஅல்.
இது, மொழிமாற்று ஆமாறு கூறுகின்றது.
(இ-ள்.)
சொல் நிலைப் பொருள் எதிர் இயைய முன்னும் பின்னும்
மாற்றி - செய்யுட்கண் பா என்னும் உறுப்பிற்கு ஏற்பச்
சொல்
நின்ற நிலை; பொருள் தாராதவழிச் சொல் நின்ற நிலைக்குப் பொருள்
எதிரே வந்து பொருந்தும்
படி அச்சொல்லின் முன்நின்ற
சொல்லைப் பின்னேயும் பின் நின்ற சொல்லை முன்னேயும் மாற்றி,
கொள்வழிக் கொளாஅல் - பொருள் கொள்ளுமிடத்தே
காளுத்துதலாம், எ-று.
(எ-டு.) ‘குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி, நரம்பார்ப்பன்ன*
வாங்குவள் பரிய’ (அகம்.4:8,9) ‘புரவியினது வாங்குவள் நரம்பு ஆர்ப்பு அன்ன பரிய’ என முன்நின்ற சொல்லைப் பின்னே மாற்றியவாறு காண்க. இச்சூத்திரமும் அது. ‘இடைமுலைக் கிடந்து’ (குறுந்.78) என்பது, ‘முலையிடை’ எனப் பின்நின்ற மொழியை முன்னே மாற்றியவாறு காண்க. ‘கடற்படை குளிப்ப மண்டி’ (புறம்.6:12) என்பதும் அது. ‘இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற், பரல் அவல் அடைய இரலை தெறிப்ப’ (அகம்.4:3.4) என்பதும் அது.
‘பொன்னோடைப் புகரணிநுதல்
துன்னருந்திறல் கமழ்கடாஅத்
தெயிறுபடை யாக வெயிற்கத வி
|