நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   762
Zoom In NormalZoom Out


டாஅக்
 

கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற்
 

பெருங்கை யானை யிரும்பிடர்த் தலைஇருந்து
 

மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயா’         (புறம்,3:7-12)
  

என்றாற்போல     வருவன எல்லாம் ‘அணுகிவந்த மாட்டு’ என்னும்
உறுப்பு.  ‘ஆரிய  மன்னர்  பறையின் எழுந்தியம்பும்’ என்பதும் அது.
‘அகன்று வந்த மாட்டு’ முருகாற்றுப்படை முதலியவற்றுட் காண்க.
 

மொழிமாற்றாவது,     கேட்டோர் கூட்டி உணருமாற்றான் ஈரடிக்
கண்ணே  வருவது  என்றும்,  மாட்டு  என்னும் உறுப்பாவது, இரண்டு
இறந்த   பல   அடிக்கண்ணும்   பல   செய்யுள்  தொடரின்கண்ணும்
அகன்றும் அணுகியும் வரும் என்றும் உணர்க. அஃது,
 

‘அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்
இயன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல்
மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்.’ (210)
 

என்னுஞ்  செய்யுளியற்சூத்திரத்தான்    உணர்க.    உதாரணங்கள்
ஆண்டுக் காட்டுதும்.
  

பூட்டுவிற்  பொருள்கோளும், அளைமறி பாப்புப் பொருள் கோளும்,
தாப்பிசைப்  பொருள்கோளும்,  கொண்டு  கூட்டுப் பொருள் கோளும்
மாட்டு   என்னும்   உறுப்பின்கண்  அடங்குமாறும்;  யாற்றொழுக்குப்
பொருள்கோள்  யாப்பு என்றும் உறுப்பின்கண் அடங்குமாறும் உணர்க.
                                                      (13)
 

* (பாடம்) நரம்பார்த் தன்ன
 

கிளைப்பெயர்கள் பிரிக்கப்படா
 

410.

தநநுஎ என்னும் அவைமுத லாகிய

கிளைநுதற் பெயரும் பிரிப்பப் பிரியா.
 

இது, மேல் தொகைச்சொற்கூறுவான்   தொகைபோல  இருபொருள்
படுவன இவை என்கின்றது.
  

(இ-ள்.)  த  ந  நு  எ எனும்  அவை  முதலாகிய  கிளை  நுதற்
பெயரும்-‘த,  ந,  நு,  எ’  என்கின்ற எழுத்துக்களை முதலாக உடைய
ஒருவரோடு   ஒருவர்க்கு   உள்ள  தொடர்ச்சிக்கிழமையைக்  கருதின
ஒட்டுப்  பெயர்களும்,  பிரிப்பப்  பிரியா - தொகைச்சொற் போல இரு
பொருள்பட்டு நிற்பினும் அவைபோலப் பின்வரும் சொல் தம் பொருள்
உணர்த்தாமையின் பிரிக்கப்படா, ஒரு சொல்லேயாய் நிற்கும், எ-று.
 

(எ-டு.) தமன், தமள், தமர்; நமன், நமள் நமர்; நுமன், நுமள், நுமர்;
எமன்,