நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   766
Zoom In NormalZoom Out


‘வண்ணத்தின்    வடிவின்’ (416) என்பதன்கண் இருபெயரொட்டாய்
ஐம்பால்  அறியாத  வடி வினையும் எடுத்தோதினாரால்  எனின், வடிவு
முதலியவற்றிற்கும்   அறுவகைத்   திரிபினுள்   ஏற்பன   கொணர்ந்து
முடித்தலின், குன்றலுந் தொகையாம் என்று உணர்க. ‘என்ன கிளவியும்’
என்றதனான்  கொள்வன  வருமொழி இன்றி நிலைமொழியும் பொருள்
உணர்த்தி நிற்கும் என்பது ஆண்டுக் கூறுதும்.
 

அன்றியும், ‘செய்தான் பொருள், இருந்தான் குன்றத்து’ என வழங்கு
வன ஒட்டி ஒரு சொல் ஆகாமையும்; செய்யுட்கண் ‘கழூஉ விளங்காரம்
கவைஇய  மார்பே  (புறம்.19:18)  எனவும்,  ‘மாற்றுமைக் கொண்ட வழி’
(கலி.  12:19) எனவும் இறுதிக்கண் இரண்டாவது தொக்கன, ‘முயங்கினெ
னல்லனோ’  (புறம்.19:7) எனவும், ‘போற்றாய்’ எனவும் வரும் முடிக்கும்
சொற்களோடு  ஒட்டி  ஒரு சொல் ஆகாமையும்; ‘தோன்றல் மறந்தோர்
துறைகெழு   நாட்டே’   எனவும்,  ‘சிறுகுரல்  நெய்தலெம் பெருங்கழி
நாட்டே’   (அகம்.120:16)  எனவும்  இறுதிக்கண்  ஏழாவது  தொக்கன,
‘தோன்றும்’  எனவும் ‘சேர்ந்தனை செலினே’ எனவும் வரும் முடிக்கும்
சொற்களோடு ஒட்டி ஒருசொல் ஆகாமையும் உணர்க.
 

இன்னும்,  ‘வல்லே  மறவல்  ஓம்புமதி எம்மே,’  என  இடைக்கண்
தொக்கனவும்,
 

‘பொன்னோடைப் புகரணிநுதல்
துன்னருந்தில் கமழ்கடாஅத்
தெயிறுபடை யாக எயிற்கத விடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற்
பெருங்கை யானை’                       (புறம்.3:7-11)
 

என அடுக்கி வருவனவும் ஒட்டி ஒருசொல் ஆகாமையும் உணர்க.
 

‘அதுவென்     வேற்றுமை’ (வேற்றுமை மயங்கியல் 11)   என்னுஞ்
சூத்திரத்து  ‘அதுவென்  உருபுகெட’  என்றதனான்,  அது  என் உருபு
நின்றால்   அல்லது  கெடுதல்  இன்மையின்  அது  நின்று  கெட்டது
என்னும்  பொருள்  தரல்  ஆண்டுக்  கூறிப்  போந்தாம்.  அதனான்,
ஈண்டுச் சேனாவரையர் கூறிய பொருட்கு விடை