நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   767
Zoom In NormalZoom Out


டயின்மை உணர்க. 

இவற்றுள் வினைத்தொகையும் பண்பின்தொகையுஞ் சிறிது தொக்குத்
தொகை  யாதலும்,  ஏனைய  முழுவதூஉந் தொக்குத் தொகை யாதலும்
உணர்க.                                               (16) 

வேற்றுமைத் தொகை

413. அவற்றுள்,
வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல. 

இது, முறையானே வேற்றுமைத் தொகை கூறுகின்றது. 

(இ-ள்) வேற்றுமை உருபுகள்தொக்க தொகைச் சொற்கள், வேற்றுமை
இயல  -  அவ்வுருபுகள்  தொக்கனவேனும்  தொகாது நின்றாற்போலப்
பொருள் உணர்த்தும் இயல்பின, எ-று.  

(எ-டு.) ஒருவன் போல்’ (கலி.26:1) எனவும்,  ‘வல்லவர், செதுமொழி
சீத்த செவி’ (கலி.68:2,3) எனவும், ‘பருத்தி வேலிக் கருப்பை  பார்க்கும்’
(புறம்.324:7)  எனவும்,  ‘வரையிழி மயிலின் ஒல்குவள்’ எனவும்,  ‘நின்,
மைந்துடை  மார்பிற்  சுணங்கு  (கலி.18:3,4) எனவும், ‘மன்ற வேம்பின்
ஒண்குழை  மலைந்து’  (புறம்.79:2) எனவும் வரும். வழக்கு உதாரணம்
வேற்றுமை மயங்கியலுட் காட்டினாம். 

சாத்தனொடு  வந்தான், சாத்தற்குக் கொடுத்தான் என்றாற்போல்வன
தொக்கால் தொகைப் பொருள் உணர்த்தாது எழுவாயும் பயனிலையுமாய்
நிற்றலின் இந்நிகரன தொகா என்று உணர்க.     (17) 

உவமத் தொகை

414. உவமத் தொகையே உவம இயல. 

இஃது, உவமத் தொகை கூறுகின்றது. 

(இ-ள்.)     உவமத் தொகையே-உவம உருபுகள் தொக்க தொகைச்
சொற்கள், உவம இயல-அவ்வுவம உருபுகள் தொக்கனவேனும் தொகாது
நின்றாற்போலப் பொருளுணர்த்தும் இயல்பின, எ-று. 

மேல்    உவம  இயலுள்  ‘வினைபயன்  மெய்யுரு’  (1)  என்னுஞ்
சூத்திரத்தான்   ‘உவமை      நால்வகைய,’   என்றும்,   ‘அவைதாம், அன்ன ஏய்ப்ப’  (11)   என்னுஞ்   சூத்திரத்தான்  ‘அவற்றின்  உருபு
முப்பத்தாறு,’  என்றுங்  கூறுகின்ற  ஆசிரியர்,  ஈண்டு  அவ்வுருபுகள்
தொக்கு நிற்குமாறு கூறுகின்றார்.  

ஒப்பில்வழியாற்     பொருள் செய்யும் அவ்வுவமஉருபுகள் தாம்
முதனிலையாய்     நின்றும்,     பெயரெச்சங்கட்கும்     முற்றிற்கும்
வினையெச்சங் கட்கும் உரிய