|
நிகழ்விற்கும் எதிர்விற்கும் காட்டினார்.
‘கொல் யானை’ என்பது, அக்காலத்து அஃது உதிரக் கோட்டொடு
வந்ததேல் இறப்பும், அதன் தொழிலைக் கண்டுநின்றுழி நிகழ்வும், அது
கொல்ல ஓடுவதனைக் கண்டுழி எதிர்வும் விரியும்.
இனி, ‘கொல்யானை’ என்பதன்கண் இரண்டு ஈறும் ஒருங்கு
தொக்கு
நின்றது என்றற்கு விதி, ‘செய்யும் செய்த என்னும் கிளவியின்,
மெய்யொருங் கியலும் தொழில்தொகு மொழியும்’ (எ.482) என்றது
ஆம். என்றதன் பொருள், ‘செய்யும், செய்த’ என்னும்
பெயரெச்சச்
சொற்களினுடைய காலங் காட்டும் உம்மும் அகரமும்
ஒரு
சொற்கண்ணே சேர நடக்கும் புடை பெயர்ச்சி தொக்கு நிற்கும்
சொற்கள் என்றவாறு. இங்ஙனம் இரண்டு பெயரெச்ச வாசகமும் சேரத்
தொக்கு நிற்றலான் ஆசிரியர் ஒரு சொல்லாக்கிப் புணர்க்கலாகாதென்று, ‘புணரியல் நிலையிடை உணரத்தோன்றா’ (எ.482) என்றார். இவ்வெழுத்ததிகாரச் சூத்திரத்தானே பெயரெச்சம் நின்று தொக்கது என்னாது, ‘பெயரெச்சப் பொருளவாய் நின்று இரண்டு சொல் தொகும்,’ என்று
சேனாவரையர் கூறியது பொருந்தாமை உணர்க. அவை தொகுங்கால் தத்தமக்கு உரிய ஆறு பொருட்கண்ணும் தொகும்.
(எ-டு.)
ஆடரங்கு, செய்குன்று, புணர்பொழுது, அரிவாள்,
கொல் யானை, செல் செலவு எனவும், ‘உறைபதி அன்றித் துறைகெழு
சிறுகுடி’ (குறுந்.145), ‘செய்பொருட் சிறப்பெண்ணி’ (கலி.16:18), ‘வான்மடி பொழுதினி னீர்நசைஇக் குறித்த,’ ‘வெல் வேல் அண்ணல் காணா ஊங்கே’ (புறம்.141:7), ‘நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்’ (புறம்.379:3), (வெல்போர்ச் சோழர்’ (ஐங்குறு.56) எனவும் வரும். இவற்றிற்குப் பொருட்கு ஏற்ற காலங்களை விரிக்க.
(19)
பண்புத்தொகை
416.
வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையினென்று
அன்ன பிறவும் அதன்குணம் நுதலி
இன்ன திதுவென வரூஉம் இயற்கை
என்ன கிளவியும் பண்பின் தொகையே.
இது பண்புத்தொகை கூறுகின்றது.
(இ-ள்.)
இன்னது இது என- ஒரு பொருட்குப் பொதுமை உள்வழி
‘இப்படி இருப்பது இப்பொருள்,’ என்று அதனை
விசேடித்துக்
கூறும்படியாக, அத
|