நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   771
Zoom In NormalZoom Out


யனவாகிய     கரும்புகள்,  தீவிதாகிய  புகை,  தீவிதாகிய  நீர்,
தீவியனவாகிய  நரம்புகள்’  என  விரிக்க,  இனி, ‘கட்கு இன்புதல்வன்,
கட்கு  இன்புதல்வி,  கட்கு  இன்புதல்வர்’  எனக்  கண்ணான் நுகரும்
இனிமைக்கண் உயர்திணை முப்பாற்கும் ஏற்ப ‘இனியனாகிய புதல்வன்,
இனியளாகிய புதல்வி, இனியராகிய புதல்வர்’ என விரிக்க. 

இனி,     வடிவு : இது வட்டம், சதுரம், கோணம் முதலியனவாம்.
‘வட்டப்  பலகை’  என்பது, ‘வட்டமாகிய பலகை’ என விரிந்து, தனக்கு
ஏற்ற ஒருமை பன்மையை உணர்த்தும் ஈறுகள் இன்றி நிற்றலின், இஃது
ஐம்பால்   அறியாத  பண்புத்தொகை  ஆயிற்று,  இங்ஙனம்  ஐம்பால்
அறியாத  பண்புத்தொகையை  ஆசிரியர்.  எழுத்தின்கண் நிலைமொழி
வருமொழி    செய்து   புணர்த்தார்.   அவை   ‘அகங்கை’   (எ.315)
முதலியனவாம். 

‘கரும்பார்ப்பான்’ என்புழிக் கருமையும் பார்ப்பானும் தம்மின் வேறு
இன்றி  நின்று  மகனாகிய  பொருளையே உணர்த்தியவாறும், ‘கருமை’
பார்ப்பான்  பொதுமையை  விசேடித்தவாறும், ‘பார்ப்பான்’ கருமையின்
பொதுமையை  விசேடியாதவாறும்  காண்க.  இவை தொகுங்கால், ‘கரு’
என்னும்  பண்பு  மாத்திரம்  நின்று  பண்புப்  பெயராங்கால்  பெற்று
நிற்கும்  ‘கருமை’  என்னும்  மகர  ஐகாரம் தொக்கு நிற்கும் என்றால்,
‘கரியது,  வெளியது,  கரியன,  வெளியன’ என்னும் பண்பு உணர்த்தும்
ஈறுகளின் கண்ணும் அவை தொக்கு இவையும் தொகைச் சொல்லாவான்
சேறலின்,  அது பொருந்தாது; ‘கரியன், கரியள், கரியர், கரியது, கரியன’
என்னும்  பண்பு உணர்த்தும் ஈறுகளே தொக்கு நிற்பன என்று உணர்க.
என்னை?   ஆசிரியர்,   ‘இப்படி  இருப்பது  இப்  பொருள்,’  என்று
வினைக்குறிப்பிற்கு  ஏற்ற  விரிவு தோன்றச் சூத்திரம் செய்தாராகலின்.
‘இன்னது  இது,’  என  ஒரு  பொருள்  மேல்  நிற்றலின், இப்பண்புத்
தொகைகள்  எல்லா பெயரெச்ச வினைக் குறிப்பாய் நிற்பதொரு பெயர்
என்று உணர்க, அஃது உருபு ஏற்றும் பயனிலை கொண்டு நிற்றலின். 

‘உயர்திணை’    என்பது வினைத்தொகையோ, பண்புத்தொகையோ?
எனின்,  ‘உயர்’  என்னும்  முதல்நிலை  நின்று, ‘உயர்ந்த திணை’ என
அகர   ஈற்றுப்   பெயரெச்சமாய்   இறந்தகாலம்  தொக்கு  நிற்றலின்,
வினைத்தொகையாம்.   இதற்கு   ஏனைக்காலமும்  தொகுமாறு  அறிக.
இதனைப்  பண்புத்  தொகையாக்கி விரிக்குங்கால், ‘கரியதாகிய குதிரை’
என விரிந்தாற்போல  விரியாது  ‘உயர்ந்ததாகிய  திணை’ என விரிக்க
வேண்டும்.    அங்ஙனம்    விரிந்துழி,   அஃது   ‘உயர்’   என்னும்
முதல்நிலைப்பின்  வந்த  தகர  அகரம்  இறந்த  காலம் உணர்த்தியே
நிற்றலின்,  பண்புத்தொகை  ஆகாமை  உணர்க.  என்னை?  பண்பும்
வினைக்குறிப்பும் முக்காலமும் புலப்படாமை நிற்கு 

மென்றே முற்கூறலின். அன்றியும்,  காலம் புலப்பட நின்றதன் மேல்
பண்பு கொள் பெயர் விரியாமை உணர்க. 

இனி,  ‘அன்ன     பிறவும்’   என்றதனான்  நுண்ணூல்,  பராரை,
நல்லாடை, வெந்தீ,  தண்ணீர், நறும்பூ என்னும் தொடக்கத்தன கொள்க.

‘மெல்லிலை’ வினைத்தொகையுமாம் (சீவக.62) 

இத்தொகையை  வேற்றுமைத்தொகை என்பார், ‘கருமையை உடைய
பார்ப்பான்’  என்று  பண்புப்  பெயராக்கி விரிப்பர். அது பொருந்தாது.
‘கரு’  என்னும் முதல் நிலை பண்பினை உணர்த்தி, இதனை உடையது
இது,’ என நில்லாது, ‘கரியது’ எனப் பண்பு உடைய பொருளை நோக்கி
நிற்றலின்,  வேற்றுமைப்  பொருண்மை  ஆண்டு இன்று என உணர்க.
‘என்ன  கிளவியும்’  என்றதனால்,  ‘சாரைப்பாம்பு, கேழற்பன்றி (152-4)
வேழக்   கரும்பு,   (பெரிய.   ஏனாதி.2)  இடைச்சொற்  கிளவி  (161),
உரிச்சொற்கிளவி  (161)  என்றாற்  போலப்  பண்பு உணர்த்தும் ஈறுகள்
தொகாது  தம்பொருள் உணர்த்தும் பெயர்ப்பெயர் இரண்டு கூடி நின்று
விசேடித்தலை  உணர்த்தும்  இரு  பெயரொட்டுப் பண்புத் தொகையும்
கொள்க.  அவை ‘சாரை’ எனவும், ‘கேழல் உழுத கரிப்புனக் கொல்லை’
எனவும்,