|
கிளவி யானும்
உம்மை தொக்க பெயர்வயி னானும்
வேற்றுமை தொக்க பெயர்வயி னானும்
ஈற்றுநின் றியலும் அன்மொழித் தொகையே.
இஃது, அன்மொழித் தொகை கூறுகின்றது.
(இ-ள்.)
அன்மொழித்தொகை-ஒருவன் கூறும் சொற்கள் அன்றிப்
பின்னர் வேறொரு சொல் தொக்கு நிற்கும் தொகை, பண்பு தொக வரூஉம் கிளவியானும்-பண்புச்சொல் தொக வரும்
தொகைப் பெயர்க்கண்ணும், உம்மைத்தொக்க பெயர்வயினானும்-உம்
என்னும் இடைச்சொல் தொக்க தொகைப்பெயர்க்கண்ணும், வேற்றுமை தொக்க பெயர்வயினானும்-வேற்றுமை உருபுகள் தொக்க தொகைப் பெயர்க்கண்ணும், ஈற்றுநின்று
இயலும்-இறுதிச் சொற்கண்ணே நின்று நடக்கும், எ-று.
முன்னர் அன்மொழியான் உணரும் பொருள்களை மனத்தான் உணர்ந்து தான் பின்னர்ப் பண்புத்தொகை முதலியனவற்றாற் கூறக் கருதியவழி அத்தொகைகளின் இறுதிச்சொற்கண் எழுந்து, படுத்தல் ஓசையான் அத்தொகைச்சொல் தோன்றிப் பொருள் விளக்குதலின், ‘ஈற்று நின்று இயலும்’ என்றார்.
(எ-டு.) வெள்ளாடை, தகர ஞாழல், பொற்றொடி என வரும்.
இவை ‘வெள்ளாடை உடுத்தாள். தகர ஞாழல் அணிந்தாள், பொற்றொடி தொட்டாள்,’ என இறுதிச்சொற்கண் எழுந்து, படுத்தல் ஓசையான் தொகை தோன்றியவாறு காண்க.
பெரும்பான்மை வரும் பண்புத்தொகைப் பின்னர் அங்ஙனம் வரும் வேற்றுமைத் தொகையை வையாத, ‘முந்து மொழிந்தான் தலைதடுமாற்’ றான் உவமைத்தொகைக் கண்ணும் வினைத்தொகைக்கண்ணும் அன் மொழித் தொகை வருதல் கொள்க. ‘வினையின் தொகையினும் உவமத் தொகையினும், அன்மொழி தோன்றும் என்மனார் புலவர்’ என்பது அவிநயம். ‘அறற்கூந்தல், திரிதாடி’ என்பனவற்றை ‘அறல் போலும் கூந்தலை உடையாள், திரிந்த தாடியை உடையான்’ என விரிக்க. (22)
தொகைச்சொற் பொருள்நிலை
419.
அவைதாம்,
முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும்
இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையலும்
அம்மொழி நிலையா தன்மொழி நிலையலும்
அந்நான் கென்ப பொருள்நிலை மரபே.
இது, தொகைச்சொற் பொருள்நிலை கூறுகின்றது.
(இ-ள்.) அவைதாம் பொருள் நிலை மரபு-அத்தொகைச் சொற்கள் தாம் பொருள் பெற்று நிற்கும் நிலைமையினது முறைமையினை, முன் மொழி நிலையலும் - முன்மொழிக்கண்ணே பொருள் சிறந்து நிற்றலும், பின் மொழி நிலையலும் -
|