|
பின் மொழிக்கண்ணே பொருள் சிறந்து நிற்றலும், இரு மொழி மேலும் ஒருங்கு உடன் நிலையலும் - இருமொழிக் கண்ணும் பொருள் ஒருங்கு உடன் நிலையலும் - இருமொழிக் கண்ணும் பொருள் ஒருங்கு சிறந்து நிற்றலும், அம்மொழி நிலையாது அன்மொழி நிலையலும் - அவ்விரு மொழிக்கண்ணும் பொருள் சிறந்து நில்லாது மற்றொரு மொழிக்கண்ணே பொருள் சிறந்து நிற்றலும், அந் நான்கு என்ப-என்று சொல்லப்பட்ட அந் நான்கு கூறு என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று.
(எ-டு.)
வேங்கைப்பூ- முன்மொழி நிலையல், அது ‘நறிது’
என்பத னொடு கூட்ட வேங்கைக்கண் பொருள்
சிறவாது பூவின்கண் பொருள் சிறத்தலின்.
ஆரமாலை-பின் மொழி நிலையல். இவை வேற்றுமைத்தொகை.
வேற்கண் - முன்மொழி நிலையல். ‘பெண்ணணங்கு’ என்பது
‘அணங்கு போலும் பெண்’ என்பதாகலின், பின்மொழி
நிலையலாம். இவை உவமத்தொகை.
கொல் யானை-முன்மொழி நிலையல். இவ்வினைத் தொகைக்குப் பின் மொழி நிலையல் இன்று. தீந்தேன் - முன்மொழி நிலையல். அடை கடல்-பின்மொழி நிலையல், இது ‘கடலாகிய கரை’ என ‘கரை’ கூறுதலே கருத்தாதலின். இவை பண்புத்தொகை.
இவை இடம் பற்றி வந்த முன்னும் பின்னுமாம். காலம் பற்றி
வருவனவும் வந்துழிக் காண்க.
பண்புத்தொகையே அன்றி ஏனைத் தொகைக்கும் விசேடித்தல்
சிறுபான்மை வருதலின், ‘ஒன்றன் கண்ணது பொருட்சிறப்பு,’ என்றார்.
‘உவா அப் பதினான்கு’ இரு மொழிமேலும் நின்றது. ‘உடன்
என்றதனான், ‘புலிவிற்கெண்டை’ எனப் பன்மொழிமேல் நிற்றலும்
கொள்க. ‘வெள்ளாடை’ என்பது இருமொழிமேலும் நில்லாது,
உடுத்தாள்மேல் பொருள் நின்றது.(23)
தொகைச்சொற்கள், ஒரு சொல் தன்மைய
420. எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய.
இது, தொகைச்சொற்கள் எல்லாம் ஒருசொல்லாய் நிற்கும் என்கின்றது.
(இ-ள்.)
எல்லாத் தொகையும் - இருமொழித் தொடரின் கண்ணும்
பன்மொழித் தொடரின்கண்
|