நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   775
Zoom In NormalZoom Out


ணும்  தொக்கு நிற்கும் எல்லாத் தொகைச் சொற்களும், ஒரு சொல்
நடைய-ஒருசொல்  நின்று தன்னை முடிக்கும் சொற்களொடு முடியுமாறு
போலத்  தாமும்  தம்மை  முடிக்கும் சொற்களொடு முடிதலை உடைய,
எ-று. 

அங்ஙனம்  முடியுங்கால் ‘பெயரினாகிய தொகையுமா ருளவே’ (68)
என்னுஞ்   சூத்திரத்தான்,   தொகைச்சொல்  இரு  வகைய  என்றும்,
அவற்றுள்  பெயரும்  பெயரும்  தொக்கன  ஒருசொல் நீர்மையவாய்ப்
பயனிலை  கொள்ளும்  என்றும்  கூறிய  விதி ஒழிந்த இலக்கணங்கள்
எல்லாம்  ஈண்டுக்  கொள்க. அவை, யானைக்கோடு என்னும் பெயரின்
ஆகிய தொகை. யானைக்கோட்டைக் குறைத்தான் என உருபு ஏற்றலும்,
நிலம்  கடந்தான்,  குன்றத்திருந்தான்,  என்னும்  வினையின்  ஆகிய
தொகைகளும்  ஒரு  முற்றுச்  சொல்லாய்ச்  சாத்தன்  என்னும் பெயர்
கோடலும்,  மா ஊர்ந்து போயினான், குன்றத்திருந்து போயினான் என
வினை   எச்சச்   சொல்லாய்   நிற்றலும்,   மா   ஊர்ந்த   சாத்தன்,
குன்றத்திருந்த  சாத்தன்  எனப்  பெயரெச்சச் சொல்லாய் நிற்றலுமாம்.
இவ்வினையின் ஆகிய தொகை, படுத்தல் ஓசையான் பெயராகிய வழிப்
பயனிலை  கோடலும் கொள்க. எழுத்தினுள் ‘பெயரும் தொழிலும்’ (132)
என்னுஞ்  சூத்திரத்துள் ‘பெயரும் தொழிலும் பிரிந்து இசைத்த வழியும்
பெயரும்  பெயரும்  ஒருங்கு  இசைத்த  வழியும் வேற்றுமை தொக்கு
நிற்கும்,’ என்றலின், நிலங்கடந்தான், குன்றத்திருந்தான், எனப் பெயருந்
தொழிலும்   பிரிந்து  இசைத்தவழியுந்  தொகையாதல்  ஆசிரியர்க்குக்
கருத்தாயிற்று. இப்பெயரும் வினையுந் தொகுதல் உவமத் தொகைக்கும்
வினைத்தொகைக்கும்    கொள்க.    இவை   இருமொழித்   தொடர்.
‘உயர்சொற்கிளவி’ (27) 

‘இடைச்சொற்கிளவி’   (161)  ‘உரிச்சொற்  கிளவி’  (161)  என்புழி,
உயர்சொல்,  இடைச்சொல்,  உரிச்சொல்  என்னுந் தொகைச் சொற்கள்
ஒரு  சொல்  நடையவாய்,  அவை கிளவி என்பதனொடு தொக்கு ஒரு
சொல்   நடையவாய்,   மேல்  வந்து  முடிப்பனவற்றொடு  முடிந்தன.
கற்சுனைக்குவளை இதழ் என்றாற்போல்வனவும் அது. 

இனி, 

‘கரியமலர் நெடுங்கண் காரிகைமுன்’ (சிலப்.7-5) ‘முட்புற முதிர்கனி’
‘பெடை  மயில்  உருவிற்  பெருந்தகு  பாடினி’ (பொருந. 47) ‘கன்னிப்
பெண்ணாரமுதின்’  (சீவக.24)  எனச்  செய்யுட்கண்  பல  தொகையும்
விராய்  வந்து,  ஒரு  சொல்  நடையவாய், தம்மை முடிப்பனவற்றொடு
முடிந்தன. 

‘துடியிடை     நெடுங்கண் துணைமுலைப் பொற்றொடி’-இஃது அறு
வகைத்  தொகையும்  ஒருங்கு தொக்கது. இனி, ‘கலனே தூணிப்பதக்கு,
தொடியே  கஃசரை, பதினொன்றரை’ என அளவும் நிறையும் எண்ணும்
ஒரு   சொல்   நடையவாய்   நின்றன.  இப்பன்மொழித்  தொகைக்கு
முற்கூறிய முடிபுகளுங் கொள்க. 

இனி,  உம்மை எச்ச உம்மை ஆகலின், தொகையல் தொடர்மொழி
களினும்  ஒருசொல் நடையவாய் முடிவன உள எனக் கொள்க. அவை,
‘யானை  கோடுகூரிது,  இரும்பு  பொன்னாயிற்று,  மன்று பாடவிந்தது,
மக்களை உயர்திணை என்ப,’ என வரும்.             (24) 

உயர்திணை உம்மைத்தொகை முடிபு

421. உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே
பலர்சொல் நடைத்தென மொழிமனார் புலவர். 

இஃது, உம்மைத் தொகைக்கு வழுவமைக்கின்றது. 

(இ-ள்.)  பெயரிடத்துத்  தொக்க  உம்மைத்தொகையின்  ஈறு, பலர்
சொல்  நடைத்து  என   மொழிமனார்   புலவர்-பலரைச்  சொல்லுஞ்
சொல்லின் இறுதிபோலப் பன்மை உணர்த்தி  நிற்கும்  என்று  கூறுவர்
ஆசிரியர், எ-று. 

(எ-டு.) கபிலபரணர்,  கபிலன் பரணன் என்பதில்  கபிலன் என்னும்
னகர ஈறு சந்தியான் கெட்டுக் கபில