|
லபரணன் என நின்றவழி இருவராய் நின்றமையின், வந்தார் என்னும் பன்மையோடு முடிதல் வேண்டுதலின், ஆண்டு நின்ற ஒருமை ஈறு பன்மையொடு முடிதல் வழு என்று கருதி, னகர ஈறு ரகர ஈறாய் நிற்கும் என வழுவமைத்தார். ‘கல்லாட மாமூல சீத்தலைச் சாத்தனார்’ என்றாற்போல்வனவும் அது. இவை ஓசை பகுத்து இசைத்தலின், ஒரு சொல்லாய் ஒட்டாமை காண்க.
உயர்திணைப்பெயர் என்னாது, மருங்கின் என்றார், உயர்திணை விரவுப் பெயரும் அடங்குதற்கு.
(25)
இன்ன என்னும் குறிப்பு மொழிகள்
422.
வாரா மரபின வரக்கூ றுதலும்
ன்னா மரபின எனக்கூ றுதலும்
அன்னவை எல்லாம் அவற்றவற் றியல்பான்
இன்ன என்னும் குறிப்புரை ஆகும்.
இது, தொகை அதிகாரம் விட்டு, மரபுவழுக் காக்கின்றது.
(இ-ள்.)
வாரா மரபின வரக்கூறுதலும்-இயங்காதனவற்றை இயங்கு வனவாகக் கூறுதலும், என்னா மரபின எனக்
கூறுதலும்- சொல்லாதன வற்றைச் சொல்லுவனவாகச் சொல்லுதலுமாகிய, அன்னவை எல்லாம்-அத் தன்மையன எல்லாம், அவற்றவற்று இயல்பான்-அவ்வப் பொருள்களின் இயல்பு காரணத்தான், இன்ன என்னும் குறிப்புரை ஆகும்-‘இத்தன்மைய,’ என்று சொல்லும் குறிப்பு மொழியாம், எ-று.
(எ-டு.) அந்நெறி ஈண்டு வந்து
கிடந்தது, அம்மலை வந்து
இதனொடு பொருந்திற்று எனவும், அவல் அவல் என்கின்றன நெல்.
மழை மழை என்கின்றது பைங்கூழ், எனவும் வரும்.
இவை வரவும்
சொல்லும் உணர்த்தாது, இன்ன
என்பதனைக் குறிப்பான்
உணர்த்தியவாறு காண்க.
இனி, ஒன்றென முடித்தல் என்பதனான் ‘கவவு அகத்திடும்’ (357) என்றாற் போல அச்சொல்லின் பொருட்டொழிலை அச்சொல்மேல் ஏற்றிக் கூறுவனவு
|