|
ம், ‘ஆயிரம் காணம் வந்தது,’
என்றாற்போல ஒருவனான்
இயக்கப்பட்டதனைத் தான் இயங்கிற்றாகப்
பொருள் கூறுவனவும்,
‘நீலுண்துகிலிகை’
என்றவழி நீலம்
பற்றியதனை நீலம்
உண்டதாக்கிப் பொருள் கூறுதலும், இப் பொருளை
இச்சொல்
சொல்லும்’ என்றாற் போல வருவனவுங் கொள்க.
(26)
இசைநிறை அடுக்கிற்கு வரையறை
423.
இசைப்படு பொருளே நான்குவரம் பாகும்.
இது, முற்கூறிய இசைநிறை அடுக்கிற்கு வரையறை கூறுகின்றது.
(இ-ள்.) சொல்
அடுக்கினுள் இசை நிறைத்தலான்
படும்
பொருண்மைக்கு வரும் அடுக்கு நான்காகிய எல்லை உடைத்தாம், எ-று.
(எ-டு.)
‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’ என வரும்.
(27)
விரைசொல் அடுக்கிற்கு வரையறை
424. விரைசொல் அடுக்கே மூன்றுவரம் பாகும்.
இது, முற்கூறிய ‘பொருளொடு புணர்தல்’
அடுக்கிற்கு வரையறை கூறுகின்றது.
(இ-ள்.)
சொல் அடுக்கினுள் பொருளொடு புணர்தற்கண் விவைு
பொருட்பட அடுக்குவது மூன்றாகிய வரம்பை உடைத்து, எ-று.
(எ-டு.) தீத்தீத்தீ
என வரும். அசைநிலை இரு முறை அல்லது அடுக்காமையின், அதற்குப் பேரெல்லை கூறாராயினார். ஒரு முறை வருவது அடுக்கு அன்மையின், ஒருசொல் அடுக்கு எனவே இருமுறை அடுக்கினமை பெறுதும். அவை பெறவே, தீத்தீ, படைபடை என விரைவு பொருளின் சிற்றெல்லை இருகால் அடுக்குதல் கொள்க. இஃது இசைப்படு பொருளுக்கும் ஒக்கும். விரைவிக்குஞ் சொல், விரை சொல்.
(28)
அசைநிலை அடுக்கு
425.
கண்டீர் என்றா கேட்டீர் என்றா
சென்ற தென்றா போயிற் றென்றா
அன்ி அனைத்தும் வினாவொடு சிவணி
நின்றவழி அசைக்கும் கிளவி என்ப.
இது, வினைச்சொற்களுள் ஒரு சாரன அசையாம் என்கின்றது.
(இ-ள்.)
போயிற்று. என்றா அன்றி அனைத்தும்-கண்டீர் எனவும்
கேட்டீர் எனவும் சென்றது எனவும்
போயிற்று எனவும் வரும்
அவ்வினைச்சொல் நான்கும், வினாவொடு சிவணி
நின்றவழி அசைக்கும்
கிளவி என்ப-வினாவொடு பொருந்தி நின்றவழி அசைநிலை அடுக்காம்
என்று கூறுவர் புலவ
|