|
லவர், எ-று.
எனவே, வினாவொடு சிவணாதவழி வினைச்சொல்லே ஆம்.
ஒருவன் கூறிய கூற்றிற்கு உடம்படாதான், கண்டீரே கண்டீரே, கேட்டீரே கேட்டீரே என்றால், வினைச்சொற்பொருண்மையும் வினாப் பொருண்மையும் இன்றி நிற்கும்.
இது, வரையாது கூறினமையின், அடுக்காதும் வரும். ஏனையவும் ஏற்புழி அடுக்கியும் அடுக்காதும் வருமாயினும், அவை இக்காலத்து அரிய.
(29)
இதுவும் அது
426. கேட்டை என்றா நின்றை என்றா
காத்தை என்றா கண்டை என்றா
அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி
முன்னுறக் கிளந்த இயல்பா கும்மே.
இதுவும் அது.
(இ-ள்.) என்றா
அன்றி அனைத்தும்-கேட்டை எனவும் நின்றை
எனவும் காத்தை எனவும் கண்டை எனவும் வரும் அம்முன்னிலை வினைச்சொல் நான்கும், முன்னிலை அல்வழி-முன்னிலைப்பொருளை உணர்த்தி நில்லாக்கால் முன்னுறக் கிளந்த இயல்பு ஆகும்மே- மேற்சொல்லப்பட்ட அசைநிலை யாம், எ-று.
இவையுங் கட்டுரைக்கண் அடுக்கியுஞ் சிறுபான்மை அடுக்காதும் வந்து, ஏற்புழி அசைநிலையாய் நிற்கும். இவையும் இக்காலத்து அரிய. இவை சிறுபான்மை வினாவொடு வருதலுங் கொள்க.
(30)
ஒருசார் வினைக்கு முற்றுக் குறியீடு
427.
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்ற
சிறப்புடை மரபின் அம்முக் காலமும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம்மூ விடத்தான் வினையினும்
குறிப்பினும்
மெய்ம்மை யானும் ஈரிரண் டாகும்
அவ்வா றென்ப முற்றியல் மொழியே.
இது, வினைச்சொற்களுள் ஒரு சாரனவற்றிற்கு ஆட்சி வேண்டி அவற்றின் குணம் காரணமாகக்கொண்டு ஒரு குறியிடுதல் கூறுகின்றது.
(இ-ள்.)
தன்மை,
முன்னிலை, படர்க்கை என்று சொல்லப்பட்ட அம்மூன்றிடத்தின் கண்ணும் வரும், மெய்ம்மையானும்-உயர்திணை அஃறிணை, விரவுத்திணை என்னும் மூவகைப் பொருள்தோறும், வினையினும் குறிப்பினும் ஈரிரண்டு ஆகும் என்ற அவ்வாறு மொழி-தெரிநிலை வினையானும் குறிப்பினும் ஈரிரண்டு ஆகும் என்ற அவ்வாறு மொழி - தெரிநிலை வினையானும் குறிப்பு வினையானும் இவ்விரண்டாய் வரும் என்று யான் முற்
|