|
பெயரெச்சமும்
வினைச்சொல் ஒழிவு; ஏனைய இடைச்சொல் ஒழிபாம்.
(34)
பிரிநிலை எச்சத்திற்கு முடிபு
431.
அவற்றுள்,
பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின.
இது, முறையே பிரிநிலை எச்சத்திற்கு முடிபு கூறுகின்றது.
(இ-ள்.) அவற்றுள்
- முற்கூறிய பத்தனுள், பிரிநிலை எச்சம் -
ஏகாரமும் ஓகாரமுமாகிய பிரிநிலை எச்சங்கள், பிரிநிலை முடிபின -
பிரிக்கப்பட்ட பொருள்மேல் வருஞ்
சொல்லையே தமக்கு முடிபாக
உடையவாம், எ-று.
(எ-டு.) அவனே
கொண்டான், அவனோ கொண்டான்,
எனப்
பிரிக்கப்பட்ட சுட்டுப்பெயரின் வினைகொண்டு
முடிந்தன. இடைச்
சொற்குத் தமக்கு இயல்பின்மையின்,
சோற்றைப் பசித்துண்டான்
என்றாற்போல அவன் என்னுஞ் சுட்டுப்பெயரும்
இடை நின்ற ஏகார
ஓகாரமும் கொண்டான் என்பதனொடு
முடிந்தன. அன்றி, அவன்
என்பது கொண்டான் என்பதனொடு முடிய,
ஏகார ஓகாரங்கள்
பிறர்கொண்டிலர் என்பதனொடு முடிந்தன
என்றல் பொருத்தம்
உடைத்தெனின், வினை யெச்சமும்
பெயரெச்சமும் ஒழித்து
இடைச்சொல்லான் வரும் எச்சங்கள்
பொருள் தருமாறு இடைச்சொல்
ஒத்தினுள் கூறி, ஈண்டு அவற்றிற்கு முடிபுசொற் கூறுகின்றாராதலின்,
கொண்டான் என்னுஞ் சொல் வந்து
அவ்வெச்சங்களை முடித்தால்
அல்லது ‘பிறர் கொண்டிலர்’ என்னும் பொருண்மை முடிபு தோன்றாது
ஆதலின், கொண்டான் என்பதே முடிக்குஞ் சொல்லாய் நிற்பப் பிறர்
கொண்டிலர் என்னும் பொருண்மை முடிபு
தோன்றாது ஆதலின்,
கொண்டான் என்பதே முடிக்குஞ் சொல்லாய் நிற்பப் பிறர் கொண்டிலர்
என்னும் பொருண்மை முடிபு தோன்றிற்று என்றலே பொருத்தமுடைத்து
என்று கோடும். அன்றியும்,
மும்மை எச்சத்திற்கு உள்நின்ற
பொருண்மை முடிபு முன்னர்க் கூறி, அதனை நீக்கிச் சொன்மை முடிபு
ஈண்டுக் கூறுகின்றதனானும், இஃதே ஆசிரியர்
கருத்தென்று உணர்க.
(35)
வினையெச்சத்திற்கு முடிபு
432.
வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பும்
நினையத் தோன்றிய முடிபா கும்மே
ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே.
இது, வினையெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது.
(இ-ள்.) வினையெ
|