நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   783
Zoom In NormalZoom Out


யஞ்சு   கிளவிக்கு   வினையும்  குறிப்பும்   நினையத்  தோன்றிய
முடிபாகும்-வினையெச்சத்திற்குத்    தெரிநிலை   வினையுங்    குறிப்பு
வினையும் ஆராயத் தோன்றிய  முடிபு  சொல்லாம்; ஆவயின் குறிப்பே
ஆக்கமொடு  வருமே  -  ஆண்டுக்  குறிப்புமுற்று ஆக்கவினையொடு
வரும், எ-று. 

(எ-டு.) உழுது  வந்தான், மருந்து  உண்டு நல்லன் ஆயினான் என
வரும்.  நினைய  என்றதனான், உழுது வந்தவன், உழுது வருதல் எனத்
தொழிற்பெயரொடும், வினைப்பெயரொடும் முடிதலுங் கொள்க. 

‘ஈண்டு  இவ்வினையெச்ச  முடிபு   கூறுகின்றவர்,  வினையியற்கண்
‘முதனிலை  மூன்றும்’  (232)   என்னுஞ்   சூத்திரம்  முதலிய  மூன்று
சூத்திரத்தான்  வினையெச்சத்திற்கு  முடிபு கூறியது  என்னை  எனின்,
ஈண்டுக்  கூறிய  பொது   விதிக்கு  ஆண்டு  மூன்று  சூத்திரத்தானும்
மூவகையாகச்  சிறப்பு  விதி  கூறினார்,  ‘எதிரது  போற்றல்’ (பொ.656)
என்னுந் தந்திர உத்தியான் என்க.
 

இனி, 

‘வேங்கையுங் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான்தண் ணியளே.’ 

(குறுந்.84)

‘வில்லக விரலிற் பொருந்தியவன்
நல்லகம் சேரின் ஒருமருங் கினமே.’ 

(குறுந்.370)

என்றாற்போல்வன    பிறவும்      ஆக்கம்     விரிந்து    அல்லது
பொருளுணர்த்தாமை உணர்க. (36)
 

பெயரெச்சத்திற்கு முடிபு

433. பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே. 

இது, பெயரெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. 

(இ-ள்.) பெயரெஞ்சு  கிளவி  பெயரொடு  முடிமே -  பெயரெச்சம்
பெயர்ச்சொல்லொடு முடியும், எ-று. 

(எ-டு.) உண்ணும் சாத்தன், உண்ட சாத்தன் என வரும். 

ஈண்டுப்  பெயரொடு  முடியும்  என்ற பொது விதிநோக்கி, ‘நிலனும்
பொருளும்’  (236)  என்னுஞ்  சூத்திரத்தான்  இப்பெயர்தாம்  பொருள்
வகையான் ஆறு  வகையவாம்  ‘எதிரது போற்றல்’  (பொ.665) என்னும்
உத்தியாற்கூறினார். (37)
 

ஒழியிசை எச்சத்திற்கு முடிபு

434. ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின. 

இது, ஒழியிசை எச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. 

(இ-ள்.) ஒழியிசை  எச்சம்  ஒழியிசை  முடிபின - மன்னுந் தில்லும்
ஓகா