|
ரமுமாகிய ஒழியிசை எச்சம்
மூன்றும் அவ்வொழியிசைப் பொருள் மேல்
வருஞ் சொல்லையே தமக்கு முடிபாக உடைய, எ-று.
(எ-டு.) கூரியதொரு
வாள்மன், என்பது திட்பம் இன்று என்பத
னொடும், ‘வருகதில் அம்ம’ (அகம்.276-7) என்பது
வந்தால் இன்னது
செய்வேன் என்பதனொடும் முடியும். ஆண்டுப்
பொருண்மை முடிபு
கூறினார், ஈண்டுப் பொருண்மையை உணர்த்தும்
சொன்மை முடிபு
கூறினார்.
கொளலோ
கொண்டான் என்பது கொண்டான்
என்பதனொடு
முடியும். அது, கொண்டுய்யப்போமாறு அறிந்திலன்
என்பதனொடு
முடிந்தது எனின், கொண்டான் என்பது
வந்து முடியாக்கால் அப்
பொருண்மை முடிபு தோன்றாமை உணர்க. (38)
எதிர்மறை எச்சத்திற்கு முடிபு
435.
எதிர்மறை
எச்சம் எதிர்மறை முடிபின.
இஃது, எதிர்மறை எச்சத்திற்கு முடிபு கூறுகின்றது.
(இ-ள்.) எதிர்மறை எச்சம் எதிர்மறை
முடிபின்-‘மாறுகோள் எச்சம்’
என்ற ஏகாரமும் (எ.275) ஓகாரமும் (எ.290) உம்மையுமாகிய எதிர்மறை
எச்சம் மூன்றும் எதிர்மறைப்
பொருளை உணர்த்துஞ் சொல்லை
முடிபாக உடைய, எ-று.
(எ-டு.) யானே கொள்வேன், யானோ கொள்வேன், சாத்தன் வரலும்
உரியன் என அவ்விடைச் சொற்களின்
பின்னர் நின்ற சொற்கள்
அவற்றை முடித்தலாற் கொள்ளேன், கொள்ளேன், வாராமையும் உரியன்
என்னும் பொருண்மை முடிபு தோன்றியவாறு காண்க. (39)
உம்மை எச்சத்திற்கு முடிபு
436.
உம்மை எச்சம் இருவீற் றானும்
தன்வினை ஒன்றிய முடிபா கும்மே.
இஃது, உம்மை எச்சத்திற்கு முடிபு கூறுகின்றது.
(இ-ள்.) இரு
வீற்றானும் - ஒன்றற்கொன்று முடிவனவும் முடிப்பனவு
மாகிய இரண்டு கூற்றின்கண்ணும் வரும், உம்மை எச்சம் தன் வினை -
உம்மை எச்சங்களை முடிக்குந் தன்னுடைய வினைச்சொற்கள், ஒன்றிய
முடிபாகும் - ஓர் உம்மைக்குப் பொருந்திய
வினையே மற்றை
உம்மைக்கும் முடிபாய் வரும், எ-று
(எ-டு.) ‘சாத்தனும்
வந்தான் கொற்றனும் வந்தான்,’ என
எதிரது
தழீஇய உம்மைக்கு முடிபாய வினையே இறந்தது தழீஇயதற்கும் முடிபு
ஆயிற்று.
‘சாத்தனும்
வந்தான்; கொற்றனும் வரும்,’ என்பதூஉம்
ஒன்றிய
முடிபாம்; ‘கொற்றனும் உண்டான்’
|