|
முடிமே-தெரிநிலைவினையொடுங் குறிப்புவினையொடும் முடியும், எ-று.
செய்தென
என்னும் ‘வினெயெச்ச என’ வினைகோடல்
முற்
கூறினார். எண் எனவும் பெயர் எனவும் வினை
கொள்ளா. எனவே,
என என்னும் இடைச்சொல் எழு வகையது ஆயிற்று.
(எ-டு.)
கார் வருமெனக் கருதி நொந்தாள், துண்ணெனத் துடித்தது,
ஒல்லென ஒலித்தது, காரெனக் கறுத்தது
என நான்கனுள் இருவகை
வினையுங் காண்க. (வினையடி, உறியடி)
என்று
என்பதற்கும் இவ்விதி ஒக்கும். கொள்ளென்று கொண்டான்,
‘மலைவான் கொள்ளென் றுயர்பலி தூஉய்’ (புறம்.143:1) என்பன, ‘கொள்
ளென்று சொல்லிக்கொண்டான்,’ எனவும், ‘மலைவான் கொள்ளவேண்டு
மென்று சொல்லி’ எனவும் பொருள் தருதலின், சொல்லெச்சமுமாம். (42)
ஏனை எச்சங்கட்கு முடிபு வேற்றுமை
439.
எஞ்சிய மூன்றும் மேல்வந்து முடிக்கும்
எஞ்சுபொருட் கிளவி இலவென மொழிப.
இஃது, ஏனை எச்சங்கட்கு முடிபுவேற்றுமை கூறுகின்றது.
(இ-ள்.) எஞ்சிய
மூன்றும்-ஒழிந்த சொல் எச்சமுங் குறிப்பு எச்சமும்
இசை எச்சமுமாகிய மூன்றும், மேல் வந்து முடிக்கும் எஞ்சு பொருட்
கிளவி இல என மொழிப-ஒழிந்த எச்சங்கள்
போலத் தமக்குமேல்
வேறாய் வந்து தம்மை முடிக்கும் எஞ்சிய பொருட்கிளவியை உடைய
அல்ல என்று கூறுவர் ஆசிரியர், எ-று.
எனவே, பிற
சொல்லை அவாவி நின்றாலும், அவை வந்து முடியா
மல், தாமே அவற்றைக் கூறி நிற்குமாயின.
அவை மேல் காட்டுதும்.
‘சொல்லை எச்சமாக உடைய சொல்’ எனவும், ‘குறிப்பின்கண் தோன்றிய
எச்சம்’ எனவும், ‘இசையின்கண் தோன்றிய
எச்சம்’ எனவும் விரிக்க.
(43)
குறிப்பெச்சமும் இசையெச்சமும் முடியுமாறு
440.
தத்தங் குறிப்பின் எச்சம் செப்பும்.
இது, குறிப்பெச்சமும் இசையெச்சமும் முடியமாறு கூறுகின்றது.
(இ-ள்.) எச்சம்-சொல்லெச்சம் ஒழிந்த
இருவகை எச்சங்கள், தத்தம்
குறிப்பின் செப்பும் - தம்மைக் கூறுவோர் தம்முடைய குறிப்புக்க
|