நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   789
Zoom In NormalZoom Out


தெனப் படுப’ (எ.1), ‘பெய ரெனப் படுப’ (சொ.162), ‘இடையெனப் படுப’
(சொ.251)  எனவும்,  ‘இலமென்  கிளவி’  (எ.316),  ‘முழுதென்  கிளவி’
(சொ.326),  ‘கடியென்  கிளவி’  (சொ.383),  ‘மீனென்  கிளவி  (எ.339),
‘தேனென்  கிளவி’  (எ.340) எனவும் வருவனவெல்லாம் இக்கூறியவாறே
வந்த சொல்லெச்சம். 

இனி, செய்யுட்கண் வருஞ் சொல் எச்சமாயின், ‘எமக்கு’ என. 

‘கல்கெழு கானவர் நல்குறு மகள்
மருந்தெனின் மருந்து:வைப்பெனின் வைப்பு.’ 

(குறுந்.71)

என்புழி முன்னும், 

                        ‘குன்றம்
குருதிப்பூவின் குலைக்காந் தட்டே’ 

(குறுந்.1)

என்புழி, யாம் காந்தட்பூவான் குறைவிலம், எனப் பின்னுங் கூற்று சொல்
எச்சமாய் நிற்குமாறு உணர்க. இதற்கு விதி,
 

‘சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை
புல்லிய கிளவி எச்சம் ஆகும்.’ 

(செய்.206)

என்னுஞ் சூத்திரம் என்று உணர்க. 

இனி,  ‘உயர்திணை  என்மனார்’  என்பதற்கு ஆசிரியர் என வரும்
பெயர் சொல்லெச்சம் என்று உதாரணம் காட்டினால், அது பொருந்தாது.
சூத்திரஞ்   செய்யுளாதலானும்,   அதுதான்   முற்றுச்சொற்குப்  பெயர்
தோன்றாமலும்  நிற்கும் என்று முற்கூறியதாகலானும் இது சொல்லெச்சம்
ஆகாமை உணர்க. (45) 

இடக்கர் அடக்கல்

442. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். 

இது, மரபு வழுக் காக்கின்றது. 

(இ-ள்.) அவையல்  கிளவி-நன்மக்களிடைக்  கூறப்படுவது அல்லாத
சொல்லினை,  மறைத்தனர்  கிளத்தல் - அவ்வாய்பாடு  மறைத்துப் பிற
வாய்ப்பாட்டான் கூறுக, எ-று. 

(எ-டு.) ‘ஆன்முன்  வரூஉம்   ஈகார  பகரம்’  (எ.233),  கண்கழீஇ
வருதும்,  கருமுக  மந்தி,  செம்பின்  ஏற்றை,  ‘புலிநின்*  றிறந்த நீரல்
ஈரத்து’  (நற்.103)  என  வரும்.  ஈகார பகரம் என்றது, ஓர் உயிர்மெய்
எழுத்தாகக்  கூறின் அவையல் கிளவியாம் என்று உயிரும் மெய்யுமாகப்
பிரித்து  அவ்வுயிர்மெய் எழுத்தையே கூறியது. ஒழிந்தன, அவ்வாறன்றி,
அவையல்  கிளவிப்  பொருளைப் பிற சொல்லான் உணர்த்தினவேனும்
அப்பொருளையே