|
உணர்த்தி நிற்றலின், அதனைப் பிறிதோராற்றான் மறைத்தனவேயாம்.
தகுதியாவது,
செத்தான் எனப் பெரும்பான்மை வழங்கப்பட்டன,
தகுதி நோக்கித் ‘துஞ்சினான்’
(நாலடி 21) எனச் சிறுபான்மை
வழங்கப்பட்டு நிற்கும்: அவையல் கிளவியாவது,
இழிந்தோர் கூறும்
இழிசொற்களை நன்மக்க ளிடை மறைத்துக்
கூறப்படும். இஃது,
இரண்டற்கும் வேற்றுமை; இங்ஙனம் மறைத்துக் கூறாக்கால் வழுவாதல்
கருதி, வழுவமைத்தார். இது, ‘பொருளிடையிடுதல்’
(பொ.656) என்னுந்
தந்திரவுத்தி. (46)
* (பாடம்) களிறுநின்
மேலதற்கு ஒரு புறனடை
443.
மறைக்குங் காலை மரீஇய தொராஅல்.
இது, மேலதற்கு ஒரு புறனடை.
(இ-ள்.)
மறைக்குங்காலை-அவ்வவையல் கிளவியை
மறைத்துக்
கூறுங் கால், மரீஇயது ஒராஅல் - மேல்தொட்டு மரீஇ வழங்கியதனை
மறைத் தலை நீக்குக, எ-று.
(எ-டு.) ‘மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீரானே,’ (புறம். 249:14) ‘ஆப்பி
நீர் எங்கும் தெளித்துச் சிறுகாலை,’
யானை இலண்டம், யாட்டுப்
பிழுக்கை என வரும். தன் பொருள்மேல் நில்லாது அணிகுறித்து நின்ற
‘பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பரிதி’
(பெரும்பாண்.2) என்றாற்
போல்வன தம் பொருளை உணர்த்துங்கால் மறைத்துக் கூறப்படுமாறு
உணர்க. (47)
இரப்பு உணர்த்துஞ் சொற்கள்
444.
ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகிடன் உடைய.
இஃது,
ஒரு பொருள்மேல் வரும் ஈ, தா, கொடு
என்னும் பல
சொற்கு மரபு வேறுபாடு கூறுகின்றது.
(இ-ள்.) ஈ தா கொடு எனக்
கிளக்கும் மூன்றும்-ஈ,தா, கொடு என்று
முன்னின்றானை நோக்கிக் கூறுஞ் சொற்கள் மூன்றும், இரவின் கிளவி
ஆகுஇடன் உடைய - ஒருவன் ஒன்றை இரத்தற்கண் வருஞ் சொல்லாம்
இடமுடைய, எ-று.
‘ஈச்சிறகு’
(நாலடி.41) எனவும், ‘தாவில் நன்பொன்’
(அகம்.212:1)
எனவும், ‘கொடுங்கோல்’ (சிலப்.23:111) எனவும் இவை பிற பொருளையும்
உண
|