நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   791
Zoom In NormalZoom Out


உணர்த்துதலின், ஆகிடன் உடைய என்றார். 

இவை  மூன்றும்   இல்லென   இரப்போர்க்கும்,  இடனின்றி  இரப்
போர்க்கும், தொலைவாகி இரப்போர்க்கும் உரிய (கலி.2) என்று உணர்க.

ஈ என்பதன் மரபு

445. அவற்றுள்,
ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே.
 

இது, முதலதன் மரபு கூறுகின்றது. 

(இ-ள்) அவற்றுள்  ஈ  என்  கிளவி  -  முற்கூறிய  மூன்றனுள் ஈ
என்னுஞ்  சொல்,  இழிந்தோன்  கூற்று -  இரக்கப்படுவானின்  இழிந்த
இரவலன் அவனை இரக்குங்கால் கூறுங் கூற்றாம், எ-று. 

(எ-டு.) ‘பெருமா!  எனக்கொரு  பிடிசோறீ’  எனவும், ‘ஈயென இரத்
தலோ அரிதே  நீயது’ (புறம்.154:8) எனவும்  இவ்விரண்டும் தன்மையும்
முன்னிலையும் பற்றி வந்தன. 

‘சிறியகட்பெறினே  எமக்கீயும்  மன்னே!’   (புறம். 235:1)   என்றது
உளப்பாட்டுத்  தன்மையும்   படர்க்கையும்  பற்றி  வந்தது.  ‘இவற்கீத்
துண்மதிகள்ளே.’    (புறம்.290:1)   என்    புழியும்   இவன்   என்பத
முன்னிலையும் படர்க்கையும் என்று உணர்க. (49) 

தா என்பதன் மரபு

446. தாவென் கிளவி ஒப்போன் கூற்றே. 

இஃது, இரண்டாவதன் மரபு கூறுகின்றது. 

(இ-ள்.) தா  என்  கிளவி  -  தன்மை  முன்னிலைக்கு  உரிய தா
என்னுஞ்  சொல்,  ஒப்போன்  கூற்று -  இரக்கப்படுவானோடு  ஒக்கும்
இரவலன் அவனை இரக்குங்கால் கூறும் கூற்றாம், எ-று. 

(எ-டு.) எனக்குச்  சோறு  தா  என  வரும்.  ‘மாணலம்  தாவென
வகுத்தற்  கண்ணும்’ (தொல்.பொ.150) எனவும், ‘என்னலம் தாராய்’ (கலி.
128:10,11) எனவும்,  கொடு  போல  வருவன, கொடுப்பான் பொருளாய்க்
கொள்வான்கண் செல்லாதனவற்றை இரந்தன வாம். 

‘ஒப்போன்  கூற்று  என்றாரேனும்,  சிறுபான்மை வலியாற்கொள்ளு
மிடத்தும் தா என்பது வரும் எனக் கொள்க. 

‘நின்னது தாவென நிலைதளரக்,
குரங்கன்னபுன் குறுங்கூளியர்
பரந்தலைக்கும் பகையொன்றென்கோ!’ 

(புறம்.136:12-14)

என வரும். (50) 

கொடு என்பதன் மரபு

447. கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே.