நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   792
Zoom In NormalZoom Out


இது, மூன்றாவதன் மரபு கூறுகின்றது. 

(இ-ள்.) கொடு  என்  கிளவி  -  கொடு  என்னும் படர்க்கையாகிய
முதனிலைச்சொல்,  உயர்ந்தோன் கூற்று-இரக்கப் படுவோனின் உயர்ந்த
இரவலன் அவனை இரக்குங்கால் கூறும் கூற்றாம், எ-று. (51) 

(எ-டு.) இவற்கு ஊண் கொடு என வரும். 

கொடு என்பது தன்மையிலும் வருதல்

448. கொடுவென் கிளவி படர்க்கை யாயினும்
தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பின்
தன்னிடத் தியலும் என்மனார் புலவர்.
 

இது, கொடு என்பதற்கு இடவழு அமைக்கின்றது. 

(இ-ள்.) தன்னைப் பிறன்போலாயினும் கூறும் குறிப்பின் கொடு என்
கிளவியும்-இரப்போர்  பலருந்  தம்மில்  ஒருவனைக்  காட்டி இவற்குக்
கொடு  எனத்  தம்மைப்   பிறரைப்   போலாயினுங்   கூறி  இரக்குங்
கருத்தினாற்   கூறப்படுங்  கொடு   என்னுஞ்   சொல்லும்,  தன்னைப்
பிறன்போலாயினும் கூறும் குறிப்பின் படர்க்கைக் கிளவியும்-கூறுகின்றார்
பலருந் தம்மைப் பிறரைப் போலாயினுங் கூறுங் கருத்தினாற் கூறப்படும்
படர்க்கைச்    சொற்களும்,    தன்னிடத்து    இயலும்    என்மனார்
புலவர்-இவ்விரண்டுந்  தன்மை  இடத்திற்கு உரியவாய் நடக்கும் என்று
கூறுவர் புலவர், எ-று. 

(எ-டு.) இவற்கு  ஊண்  கொடு  என  வரும். அங்ஙனஞ் சொல்லு
வானோ, பெருஞ்சாத்தன் தந்தை; சொல்லப்படுவானோ, பெருஞ்சாத்தன்
தாய். 

இந்நான்கு  சூத்திரத்தானும் ஆண்பால் உரிமையாற் கூறினாரேனும்,
அது முப்பாற்கும் உரித்தமாறு மேலே உணர்க. 

சேனாவரையர், கொடு என்பது தானே தன்னைப் பிறன்போல் கூறும்
குறிப்பினையும்  உணர்த்தும்  என்று,  அவற்குச் சாந்து கொடு, என்பது
உதாரணங்   காட்டினாராலெனின்,  கொடு   என்பது  கொடுப்பதொரு
பொருளை ஏற்றற்குரிய  நான்கன்  உருபு வந்தால் அதனை முடித்தற்கு
வந்த  சொல்லாதலின், அவற்கு, இவற்கு,  உவற்கு என்னுஞ் சொற்களை
அவாய்,  அவற்றை முடித்தே  நிற்றல்வேண்டும்; வேண்டவே, அவற்குக்
கொடு
என்பது  ‘ஏனை இரண்டும்’ (30) என்புழிக் கூறியதாம். எனக்குக்
கொ