நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   793
Zoom In NormalZoom Out


ாடு, என்பது  தன்னைப்  பிறன்போற்  கூறுங்  குறிப்பு இல்லாதாயிற்று.
ஆதலான், தன்னைப் பிறன்போற்  கூறுங் குறிப்பிற்றாய் வழுவமைதியும்
ஏற்று  நிற்பது இவற்குக்  கொடு என்னும் உதாரணமே ஆயிற்று என்க.
(52) 

ஒரு சார்ச் சொற்களின் வழுவமைதி

449. பெயர்நிலைக் கிளவியின் ஆஅ குநவும்
திசைநிலைக் கிளவியின் ஆஅ குநவும்
தொன்னெறி மொழிவயின் ஆஅ குநவும்
மெய்ந்நிலை மயக்கின் ஆஅ குநவும்
மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும்
அன்றி அனைத்தும் கடப்பா டிலவே.
 

இதுவும் ஒருசார் வழுவமைக்கின்றது. 

(இ-ள்.) பெயர்நிலைக்  கிளவியின்  ஆஅகுநவும்-தத்தம்  பொருள்
உணர்த்தாது  பெயர்ந்த நிலைமையை உடைய சொல்லான் வருஞ் செய்
யுளும்,  திசைநிலைக்  கிளவியின் ஆஅகுநவும்-திசையான்  நிலைபெற்ற
பெயரான்    வருஞ்     சொல்லும்,     மொழிவயின்    தொன்னெறி
ஆஅகுநவும்-சொல்லிடத்துப் பழைய நெறியான் ஆய் வருஞ் சொல்லும்,
மெய்ந்நிலை  மயக்கின்  ஆஅகுநவும்-ஒருமைப்  பொருளான்  கூறவே
பன்மைப்   பொருள்   தோன்றி   மயங்கும்   மயக்கினான்   ஆகுஞ்
செய்யுள்களும்,  மந்திரப்  பொருள்  வயின்  ஆஅகுநவும்-மந்திரத்தை
உடைய  தெய்வங்களிடத்தே  அம்மந்திர  மாய்  வருஞ்  சொற்களும்,
அன்றி   அனைத்தும்-ஆகிய   அவ்வனைத்தும்,   கடப்பாடு   இல -
வழங்கியவாறே   கொள்வது   அல்லது    இலக்கணத்தான்  யாப்புறவு
உடையவல்ல, எ-று.
 

(எ-டு.) ‘ஒள்வாள்
கறையடி யானைக் கல்ல
துறைகழிப் பறியா வேலோன் ஊரே.’ 

(புறம்.323:5-7)

என்புழி,  ‘வேலோன்’  என்பது ‘வேலையுடையோன்’ என்னும் பொருள்
பெயர்த்து ஒரு  பெயர்த்தன்மையாய்  நின்றது.  ‘செழுந்தா  மரையன்ன
வாட்கண்’ (சீவக.8) என்பதூஉம் அது.  

‘தென்னன்,  வடமன்,  குடக்கோ,  தென்பாண்டி’ என இவை திசை
நிலைக்   கிளவி.   முதுமொழி,   பொருள்  உடையனவும்   பொருள்
இல்லனவும்  என  இருவகைப்படும்.  ‘யாட்டுளா  னின்னுரை  தாரான்,’
என்றது,  ‘இடையன்  எழுத்தொடு  புணராது  பொருள்  அறிவுறுக்கும்
மொழியைக் கூறுதல் அன்றி, எழுத்தொடு புணர்ந்து