|
பொருள் அறிவுறுக்கும்
மொழியைக் கூறான்,’ என்னும் பொருள் தந்து
நின்றது. ‘யாற்றுட் செத்த எருமை ஈர்த்தல் ஊர்க் குயவர்க்குக் கடன்,’
என்பது, ‘குயவன் சுள்ளையி னெழுந்த புகையான்
ஆம் மேகந்தந்த
நீரான் எருமை சாதலின், அதனை இழுத்தல் குயவர்க்குக் கடனாயிற்று,’
என ஒரு காரணம் உள்ளதுபோலக் கூறுகின்றது. உண்மைப் பொருள்
அன்றி, ஒருவன் இயைபின்றிக் கூறிய
சொற்கு எடுத்துக்காட்டாகக்
கூறப்படுதலின், பொருள் உணர்த்தாதாயிற்று. ‘இல்வாழ்வான் என்பான்’
(குறள்.41) ‘தினைத்துணையும் தேரான் பிறனில்
புகல்’ (குறள்.144)
‘நட்பரண் ஆறும் உடையான்’ (குறள்.381) ‘வறியவன் இளமைபோல்’
(கலி.10:1) என்றாற் போல்வன எல்லாம் ஒருமைப்பொருள் கூறினவேனும்
பன்மைப்பொருளை உணர்த்தலின், மெய்ந்நிலை
மயக்கம் ஆயிற்று.
மெய்-பொருள்.
மந்திரச் சொல், மந்திர நூல்களிற் கேட்டு உணர்க.
‘நம்பி,
நங்கை’ என அஃறிணையைக் கூறுவனவும், ‘எழுதுவரிக்
கோலத்தார்’ என்னும் பிரேளிகைச் செய்யுளின் திணை வழுவும், ‘ஒரு
வரைக் கூறும் பன்மைக் கிளவியும்’
(27) என்னுஞ் சூத்திரத்துள்
அடங்குமாறும், ‘புலி யான், பூசையான்’
என்பன திசைச்சொற்கண்
அடங்குமாறும் உணர்க. வெண்
கொற்றப் படைத்தலைவனும்
சிறப்பினாகிய பெயர்க்கண் அடங்கும். (53)
ஓசை வேறுபாட்டான் ‘செய்யாய்’ ‘செய்’ என நிற்றல்
450.
செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்
செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே.
இஃது,
ஓசை வேறுபாட்டான் ஒரு சொல்
ஒரு சொல்லாம்
என்கின்றது.
(இ-ள்.) செய்யாய்
என்னும் முன்னிலை வினைச்சொல்-ஒரு தொழி
லினைச் செய்யாய்’ என்னும் மறையாகிய
முன்னிலை வினைச்சொல்,
செய் என் கிளவி ஆகு இடன் உடைத்து - ‘அத் தொழிலினைச் செய்’
என்னும் உடம்பாடு முன்னிலை
வினைச்சொல்லாம் இடத்தினை
உடைத்து, எ-று.
‘இடனுடைத்து,’
என்றதனான், ‘உண்ணாய்’ என்பது மறையாய் வரு
தலே பெரும்பான்மை ஆயிற்று. அது சிறுபான்மை உடம்பாட்டின்கண்
வருங்கா
|