நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   796
Zoom In NormalZoom Out


 

னை ஏகாரம் ‘உண்பேனே, உண்ணேனே’ என விதிக்கும் மறைக்கும்
வந்தாற்போலக் கொள்க.

 

மறை என்பது செய்யாய் என்னும்  வாசகத்தாற் சூத்திரஞ் செய்தமை
யாற்  பெற்றாம். செய்  என்பது  விதி  வினையே உணர்த்துதல் பற்றிச்
‘செய்யென் கிளவி’ என்றார்.

 

இனி,  சேனாவரையர், செய்யாய் என்னும் முன்னிலை முற்றுச்சொல்
ஆய்  என்னும்  ஈறுகெடச்  செய் என்னும் முன்னிலை ஏவல் முற்றாய்
நிற்கும்,’  என்று  பொருள்  கூறி,  ‘உண்ணாய்,   தின்னாய்,  நடவாய்,
கிடவாய்’  என்பன  ஈறு  கெட்டு, ‘உண், தின், நட, கிட’ என நிற்கும்.’
என்றாராலெனின்,  உண்ணாய்  என்பதும்  உண்   என்பதுந்  தம்மில்
பொருள்வேறுபாடு  உடைமையின்,  உண்ணாய்  என்பதன்  பொருளை
உண் என்பது உணர்த்தி ஈறுகெட்டு நிற்கும் என்றல் பொருந்தாதாம். ‘நீ
கலாய்த்திராது  உண்ணாய்,’  என்றபொருளை  உண்  என்றது  தாராது
ஏவற்பொருட்டாய் நின்றவாறு காண்க. அன்றியும், இவ் ‘உண், தின், நட,
கிட’ என்பனவற்றை முதனிலை என்றே தாமுங் கூறிப் போந்தாராதலின்,
இவை  முதனிலையாய்  நிற்குமிடத்துக் ‘கரு,  செய்,  வெள்’  என்னும்
முதனிலைகள்  பண்பு மாத்திரையே உணர்த்தி, ஈறு கெடுதலும் பொருள்
உணர்த்துதலுமின்றி   நின்றாற்போல,  இவையும்   வினைமாத்திரையே
உணர்த்தி,  ஈறு   கெடுதலும்  பொருள்  உணர்த்துதலுமின்றி   நிற்றல்
வேண்டும்.  இவை  அங்ஙனம்  நில்லாது,  ஆய் என்னும் ஈறு கெட்டு
முன்னிலை  ஏவற்  பொருண்மையே  உணர்த்தி   நிற்கும்  என்றலின்,
‘முதனிலை’   என்றல்   பொருந்தாதாம்.   ஆகவே,   வினைச்சொற்கு
முதனிலைகள்  ‘உண்,  தின்,  நட, கிட’ முதலிய என்றாம். இவர் பிறர்
மதமே  கூறினார்;  இஃது   ஆசிரியர்க்குக்   கருத்தன்மை   உணர்க.
அன்றியும், ‘உண், தின், நட, கிட’ முதலியன