டு திணை
வகுத்து அதன்கட் கைக்கிளை முதற் பெருந்திணை யிறுவா யேழும் வெட்சி முதற் பாடாண்டிணை யிறுவா யேழுமாகப் பதினான்கு பால் வகுத்து, ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி பரிபாடல் மருட்பா வென அறுவகைச் செய்யுள் வகுத்து, முல்லை குறிஞ்சி மருதம் நெய்த லென நால்வகை நிலன் இயற்றிச் சிறுபொழு தாறும் பெரும்பொழு தாறுமாகப் பனினிரண்டு காலம் வகுத்து, அகத்திணை வழுவேழும் புறத்திணை வழுவேழுமெனப் பதினான்கு வழுவமைத்து, நாடக வழக்கும் உலகியல் வழக்குமென இருவகை வழக்கு வகுத்து, வழக்கிடமுஞ்
செய்யுளிடமுமென
இரண்டு இடத்தான் ஆராய்ந்தாராதலின். எட்டிறந்த பல்வகையான்
ஆராய்ந்தாரென்பார் முதல் கரு உரியுந்,
திணைதொறும் மரீஇய பெயருந், திணைநிலைப் பெயரும், இருவகைக் கைகோளும், பன்னிருவகைக் கூற்றும், பத்துவகைக் கேட்போரும், எட்டுவகை மெய்ப்பாடும்,
நால்வகை உவமமும், ஐவகை மரபு மென்பர்.
இனி, இவ்வோத்து
அகத்திணைக்கெல்லாம் பொது இலக்கண முணர்த்துதலின் அகத்திணையியலென்னும் பெயர்த்தாயிற்று; என்னை? எழுவகை யகத்திணையுள் உரிமைவகையான் நிலம்பெறுவன இவையெனவும் அந்நிலத்திடைப் பொதுவகையான் நிகழ்வன கைக்கிளை பெருந்திணை பாலை யெனவுங் கூறலானும், அவற்றுட் பாலைத்திணை நிலவகையான் நடுவணதெனப்பட்டு
நால்வகை யொழுக்கம்
நிகழா நின்றுழி
அந்நான்கனுள்ளும் பிரிதற்பொருட்டாய்த்தான் பொதுவாய் நிற்குமெனக் கூறலானும், முதல் கரு உரிப்பொருளும் உவமங்களும் மரபும்
பொதுவகையாற் கூறப்படுதலானும், பிறவும் இன்னோரன்ன பொதுப் பொருண்மைகள் கூறலானுமென்பது. இங்ஙனம் ஓதிய அகத்திணைக்குச் சிறப்பிலக்கணம் ஏனை ஓத்துக்களாற் கூறுப.
ஒத்த அன்பான்ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம்,
அக்கூட்டத்தின்
பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக
|