இது முற்கூறிய ஏழனுள்
தமக்கென நிலம் பெறுவனவும், நிலம் பெறாதனவுங் கூறுகின்றது.
(இ-ள்)
அவற்றுள்- முற்கூறிய ஏழு திணையுள்; நடுவண் ஐந்திணை - கைக்கிளை
பெருந்திணைக்கு நடுவுநின்ற ஐந்தொழுக்கத்தினை; படு திரை வையம் பாத்திய பண்பே - ஒலிக்குங் திரைசூழ்ந்த உலகிற்கு ஆசிரியன் பகுத்துக்கொடுத்த இலக்கணத்தை; நடுவணது ஒழிய -நடுவணதாகிய பாலையை அவ்வுலகம் பெறாதே நிற்கும் படியாகச் செய்தார் எ-று.
எனவே, யானும் அவ்வாறே நூல் செய்வ லென்றார்.
உலகத்தைப் படைக்கின்ற
காலத்துக் காடும் மலையும் நாடுங் கடற்கரையுமாகப் படைத்து, இந்நால்வகை நிலத்திற்கு ஆசிரியன் தான் படைத்த ஐவகை ஒழுக்கத்திற் பாலை யொழிந்தனவற்றைப் பகுத்துக் கொடுத்தான், அப் பாலை
ஏனையபோல ஒருபாற் படாது நால்வகை நிலத்திற்கும் உரியதாகப் புலனெறி வழக்கஞ்செய்து வருதல்பற்றி. பாலைக்கு நடுவணதென்னும் பெயர் ஆட்சியும் குணனும் காரணமாகப்பெற்ற பெயர். ‘நடுவு நிலைத்திணையே நண்பகல் வேனில்’ (9) என ஆள்ப. புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவற்றிற்கு இடையே பிரிவு நிகழ்தலானும், நால்வகை
|