நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2267
Zoom In NormalZoom Out


ரண்டனானும் ஆராய்தல் வேண்டுதலின்.

இஃது     இல்லதெனப்படாது,  உலகியலேயாம். உலகியலின்றேல்,
ஆகாயப்பூ  நாறிற்றென்றுழி  அது  சூடக்  கருதுவாருமின்றி மயங்கக்
கூறினானென்று உலகம் இழித்திடப்படுதலின் இதுவும் இழித்திடப்படும்.
இச்செய்யுள்    வழக்கினை    நாடக    வழக்கென   மேற்கூறினார்,
எவ்விடத்தும்   எக்காலத்தும்   ஒப்ப  நிகழும்  உலகியல்  போலாது,
உள்ளோன்  தலைவனாக இல்லது புணர்த்தல் முதலாகப் புனைந்துரை
வகையான்  கூறும்  நாடகஇலக்கணம் போல யாதானுமொரோவழி ஒரு
சாரார்மாட்டு   உலகியலான்   நிகழும் ஒழுக்கத்தினை  எல்லார்க்கும்
பொதுவாக்கி  இடமுங் காலமும் நியமித்துச்  செய்யுட் செய்த ஒப்புமை
நோக்கி.  மற்று  இல்லோன்  தலைவனாக  இல்லது புணர்க்கும் நாடக
வழக்குப்போல்   ஈண்டுக்  கொள்ளாமை  ‘நாடக  வழக்கு’  என்னுஞ்
சூத்திரத்துட் (53) கூறுதும்.

‘‘கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன்
குறும்பொறை நாட னல்வய லூரன்
தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலுங் கூம்புங்
காலை வரினுங் களைஞரோ விலரே.’’      (ஐங்குறு.183)

என   இவ்  ஐங்குறுநூற்றுள்  இடம்  நியமித்துக்  கூறியது  செய்யுள்
வழக்கு.

இனி, அவை முறையே சிறந்து வருமாறு:-

‘‘முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ
இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற்
பரலவ லடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானங் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானங்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை போதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட்
போதவிழ் அலரின்நாறும்
ஆய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே.’’  (அகம்.4)

இது  குறித்த காலம் வந்ததும், அவரும் வந்தாரென ஆற்றுவித்தது.
இக்  களிற்றியானைநிரையுள்,   முல்லைக்கு  முதலுங்  கருவும்  வந்து
உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது.

‘‘கிளைபா ராட்டும் கடுநடை வயக்களிறு
முளைதரு பூட்டி வேண்டுகுள கருத்த