நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2269
Zoom In NormalZoom Out


வதுவை அயர்ந்தனை யென்ப அஃதியாங்
கூறேம் வாழியர் எந்தை செறுநர்
களிறுடை அருஞ்சமந் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லி னள்ளூ ரன்னஎம்
ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெருமநின் தகைக்குநர் யாரோ.’’    (அகம். 46)

இது  வாயின்  மறுத்தது. இக் களிற்றியானைநிரையுள், மருதத்திற்கு
முதலுங்    கருவும்  வந்து  உரிப்பொருளாற்  சிறப்பெய்தி  முடிந்தது.
‘வண்டூது பனிமல’ ரெனவே வைகறையும் வந்தது.

‘‘கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப
நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப
மீனார் குருகின் மென்பறைத் தொழுதி
குவையிரும் புன்னைக் குடம்பை சேர
அசைவண் டார்க்கும் அல்குறு காலைத்
தாழை தளரத் தூக்கி மாலை
அழிதக வந்த கொண்டலொகு கழிபடர்க்
காமர் நெஞ்சங் கையறு பினையத்
துயரஞ் செய்துநம் அருளா ராயினும்
அறாஅ லியரோ அவருடைக் கேண்மை
அளியின் மையின் அவணுறைவு முனைஇ
வாரற்க தில்ல தோழி கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்புந்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணை
அகமடற் சேக்குந் துறைவன்
இன்றுயின் மார்பின் சென்றஎன் நெஞ்சே.’’   (அகம்.40)

இது     பொருட் பிரிவிடைத் தோழிக்கு  உரைத்தது. இக்களிற்றி
யானைநிரையுள்,  நெய்தற்கு முதலுங் கருவும் வந்து உரிப் பொருளாற்
சிறப்பெய்தி    முடிந்தது.   இச்சிறப்பானே,   முதலின்றிக்   கருவும்
உரிப்பொருளும்  பெறுவனவும்,  முதலுங் கருவுமின்றி உரிப்பொருளே
பெறுவனவுங் கொள்க.

‘‘திருநகர் விளங்கு மாசில் கற்பி
னரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு
நின்னுடைக் கேண்மை யெவனோ முல்லை
யிரும்பல் கூந்த னாற்றமும்
முருந்தேர் வெண்ப லொளியநீ பெறவே.’’

இது பொருள்வயிற்  பரிந்தோன் சுரத்து நினைந்து உரைத்தது. இது
முதற்பொருளின்றி வந்த முல்லை.

‘‘கரந்தை விரைஇய தண்ணறுங் கண்ணி
யிளைய ரேவ வியங்குபரி கடைஇப்
பகைமுனை வலிக்குங் தேரொடு
வினைமுடித் தனர்நங் காத லோரே.’’

இது  வந்தாரென் றாற்றுவித்தது. இது முதலுங்  கருவு மின்றி வந்த
முல்லை.

‘‘நறைபரந்த சாந்த மறவெறிந்து நாளா
லுறையெதிர்ந்து வித்தியவூ ழேனற் - பிறையெதிர்ந்த
தாமரை போன்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
வேமரை போந்தன வீண்டு.’’           (திணைமாலை.1)

இது மதியும்படுத்தது, இது முதற்பொருளின்றி வந்த குறிஞ்சி.

‘‘முதுக்குறைந் தனளே முதுக்குறைந் த