நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2401
Zoom In NormalZoom Out


ந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையு நினதே’’        (புறம்.272)

இது சூடின நொச்சியைப் புகழ்ந்தது.

மற்று   அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையானும் - இடைமதிலைக்
காக்கின்ற   அகத்துழிஞையோன்  நின்ற  இடத்தினைப் பின்னை அம்
மதிலின்     புறத்திருந்தோன்    விரும்பிக்கொண்ட    புதுக்கோளும்,
அங்ஙனம்    புறத்தோன்   கொண்ட   அவ்விடத்தினைப்   பின்னை
யகத்தோன் தான் விரும்பிக்கொண்ட புதுக்கோளும்;

பிற்பட்டதுறைக்குப்    புறத்தோன் அதனையென மாற்றிப் பொருள்
கொள்க.  முன்னர்ப்  புறமதிலின் போர்போல இடை மதிலினும் போர்
கூறினார்.

உ-ம்:

‘‘வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கா
லஞ்சி யொதுங்காதார் யார்யாவர் - மஞ்சுசூழ்
வான்றோய் புரிசை பொறியு மடங்கின
வான்றோ ரடக்கம்போ லாங்கு’’

            (பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1329.
                                 எயில்கோடல்8)

இது புறத்தோன் வீழ்ந்த புதுமை.

‘‘தாக்கற்குப் பேருந் தகர்போன் மதிலகத்
தூக்க முடையோ ரொதுங்கியுங் - கார்க்க
ணிடி புறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றா
ரடிபிறக் கீடு மரிது’’
      (தகடூர்யாத்திரை.புறத்திரட்டு.1341.எயில்காத்தல் 7)

இஃது அகத்தோன் வீழ்ந்த புதுமை.

நீர்ச்  செரு   வீழ்ந்த   பாசியும் - கொண்ட மதிலகத்தை விட்டப்
போகாத  புறத்தோரும்   அவரைக்  கழியத்  தாக்கல் ஆற்றாத அகத்
தோரும்  எயிற்புறத்து   அகழின் இருகரையும் பற்றி நீரிடைப் படர்ந்த
நீர்ப்பாசி போன்று அக்கிடங்கின்கட்போரை விரும்பின பாசியும்;

‘பாசிபோல் நீங்காமல் நிற்றலிற் ‘பாசி’ யென்றார்.

உ-ம்:

‘‘பொலங்செய் கருவிப் பொறையுமிப் பண்ணாய்
நிலந்திடர் பட்டதின் றாயிற் - கலங்கமர்மேல்
வேத்தமர் செய்யும் விரகென்னாம் வேன்மறவர்
நீத்துநீர்ப் பாய்புலிபோ னின்று’’

இஃது இருவருக்கும் ஒக்கும்.

வேறு வேறு வருமெனினுங் காண்க.

அதா  அன்று  ஊர்ச்  செரு வீழ்ந்த மற்றதன் மறனும் - அம் மதிற்
புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய அப்பாசி மறனும்;

பாசியென்றார், நீரிற் பாசிபோல  இருவரும்  ஒதுங்கியும்  தூர்ந்தும்
பொருதலின்.

உ-ம்:

‘‘மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர்
பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தா - ரெறிதொறும்போய்
நீர்ச்செறி பாசிபோ னீங்காது தங்கோமா
னூர்ச்செரு வுற்றாரைக் கண்டு’’

இது புறத்தோன் பாசிமறம்.

‘‘தாந்தங் கடைதொறுஞ் சாய்ப்பவு மேல்விழுந்த
வேந்தன் படைப்பிணத்து வீழ்தலா - னாங்கு
மதுக்கமழுந் தார்மன்னர்க் குள்ளூர் மறுகிற்
பதுக்கையும் வேண்டாதாம் பற்று’’

இஃது அகத்தோன் பாசிமறம்.

அகமிசைக்கு   இவர்ந்தோன்     பக்கமும்  -  புறஞ்சேரிமதிலும்
ஊரமர்மதிலும்  அல்லாத  கோயிற்  புரிசைகளின்  மேலும் ஏறிநின்று
போர்