| நிலைமைக்கண்ணும்;
ஒருவ னொருவனைத் தாங்கின எருமையென முடிக்க.
உ-ம்:
‘‘சீற்றங் கனற்றச் சிறக்கணித்துச் செல்லுங்கால் வேற்றெருமை போன்றா னிகல்வெய்யோன் - மாற்றான் படைவரவு காத்துத்தன் பல்படையைப் பின்காத் திடைவருங்காற் பின்வருவார் யார்’’
என வரும்.
படையறுத்துப்
பாழிகொள்ளும் ஏமத்தானும் - கைப்
படையைப்
போக்கி மெய்யாற் போர்ச்செய்யும் மயக்கத்தின்
கண்ணும். பாழி, வலி; இஃது ஆகுபெயர்.
உ-ம்:
‘‘கொல்லேறு பாய்ந்தழிந்த கோடுபோற் றண்டிறுத்து மல்லேறு தோள்வீமன் மாமனைப் - புல்லிக்கொண் டாறாத போர்மலைந்தான் ஆங்கரசர் கண்டார்த்தா ரேறாட லாய ரென’’
(பாரதம்)
என்னும் பாரதப்பாட்டுக் கொள்க.
‘‘நீலக் கச்சைப் பூந்துவ ராடைப் பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வருங் களிற்றொடு வேறுரந் தினியே தன்னுந் துரக்குவன் போலு மொன்னல ரெஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக் கையின் வாங்கித் தழீஇ மொய்ம்பி னூக்கி மெய்க்கொண் டனனே’’
(புறம்.274)
என்பதும் அது.
களிறெறிந்
தெதிர்ந்தோர் பாடும் - மாற்றுவேந்தன் ஊர்ந்து வந்த
களிற்றைக் கையெறிந்தானுங் கடுக்கொண்டெதிர்ந்தானும் விலக்கி அவனையும் அக்களிற்றையும் போர்செய்தோர் பெருமைக்கண்ணும்;
உ-ம்:
‘‘இடியா னிருண்முகிலு மேறுண்ணு மென்னும் படியாற் பகடொன்று மீட்டு - வடிவே லெறிந்தார்த்தார் மள்ள ரிமையாத கண்கொண் டறிந்தார்த்தார் வானோரு மாங்கு.’’
என வரும்.
‘‘வானவர் போரிற் றானவர்க் கடந்த மான வேந்தன் யானையிற் தனாஅது பல்படை நெரிவ தொல்லான் வீமன் பிறக்கிடங் கொடானதன் முகத்தெறிந் தார்த்துத் தானெதிர் மலைந்த காலை யாங்கதன் கோடுழக் கிழிந்த மார்பொடு நிலஞ்சேர்ந்து போர்க்கோள் வளாகந் தேர்த்துக ளனைத்தினு மிடைகொள லின்றிப் புடைபெயர்ந்து புரண்டு வருந்தா வுள்ளமொடு பெயர்ந்தனன் பெருந்தகை யாண்மையொடு பெயர்த்தலோ வரிதே.’’
இப் பாரதப்பாட்டும் இதன்பாற்படும்.
இது களிறெறிந்தான்
பெருமை கூறுதலின் யானைநிலையுள்
அடங்காதாயிற்று.
களிற்றொடு
பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும். அங்ஙனம் நின்று களிற்றொடு பட்ட வேந்தனைக் கொன்ற
வேந்தன் படையாளர் வியந்து பட்டோனைச்
சூழ்ந்து நின்று ஆடுந் திரட்சிக்கண்ணும்;
அமலும் நெருங்குதலாதலின்,
|