|
இவ் வாகைத்திணை
பாலையெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாமென்கின்றது.
(இ-ள்.)
வாகை தானே - இனிக் கூறாதுநின்ற. புறத்திணையுள் வாகையெனப்பட்டது தானே;
பாலையது புறனே. பாலையென்னும் அகத்திணைக்குப் புறனாம்
எ-று.
என்னை? பாலைக்குப்
புணர்ச்சியின் நீங்கி, இல்லறம் நிகழ்த்திப் புகழெய்துதற்குப் பிரியுமாறுபோலச், சுற்றத்தொடர்ச்சியின் நீங்கி அறப்போர்செய்து
துறக்கம் பெறுங் கருத்தினாற் சேறலானும், வாளினுந்தாளினும்
நிறையினும் பொறையினும் வென்றி யெய்துவோரும் மனையோரை நீங்கிச் சேறலானும் பிரிவுள
தாயிற்று.
பாலை தனக்கென ஒரு நிலமின்றி நால்வகை நிலத்தும் நிகழுமாறு போல, முற்கூறிய புறத்திணை நான்கும் இடமாக வாகைத் திணைநிகழ்தலிற்
றனக்கு நிலமின்றாயிற்று. ‘‘நாளு நாளு மாள்வினை
யழுங்க, வில்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற்
புகழ்’’ என
ஆள்வினைச் சிறப்புக் கூறிப் பிரியுமாறு போல, இதற்குப் துறக்கமே எய்தும் ஆள்வினைச்சிறப்புக் கூறலுங் கொள்க. பாலை பெருவரவிற்றாய்த் தொகைகளுள் வருமாறு போல வாகையும் பெருவரவிற்றாய் வருதலும் கொள்க.
வாகைத்திணையது பொது
இலக்கணம்
|