பேருலைக்கண்
ஏற்றி ஈனாவேண்மாள்
இடந்துழந்தட்ட கூழ்ப்பலியைப்
பலியாகக் கொடுத்து
எஞ்சிநின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப்பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்துகொள்ளக்
கொடுத்தலாம்.
உ-ம்:
‘‘இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பிற் கருங்கை யானை கொண்மூ வாக நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த வாண்மின் னாக வயங்குகடிப் படைந்த குருதிப் பல்லிய முரசுமுழக் காக வரசராப் பனிக்கு மணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்பறு வல்வில் வீங்குநா ணுகைத்த கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை யீரச் செறுவிற் றேரே ராக விடியல் புக்கு நெடிய நீட்டிநின் செருப்படை மிளிர்ந்த திருத்துறு செஞ்சாற் பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ் பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர் கான நரியொடு கழுதுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப் பாடுநர்க் கிருந்த பீடுடை யாள தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி வேய்வை காணா விருந்திற் போர்வை யரிக்குரற் றடாரி யுருப்ப வொற்றிப் பாடி வந்திசிற் பெரும பாடான் றெழிலி தோயு மிமிழிசை யருவிப் பொன்னுடை நெடுங்கோட் டிமயத் தன்ன வோடை நுதல வொல்குத லறியாத் துடியடிக் குழவிப் பிடியிடை மிடைந்த வேழ முகவை நல்குமதி தாழா வீகைத் தகைவெய் யோயே’’
(புறம்.369)
என வரும்.
‘‘நளிகட
லிருங்குட்டத்து’’ என்னும் (26) புறப்பாட்டுப் பலி கொடுத்தது.
களவழி நாற்பது புலவர்
களவழியைத் தோற்றுவித்தது.
‘‘ஓஒ வுவமை யுறழ்வின்றி யொத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெல்லாங் கீழ்மேலா யாவுதை காளாம்பி போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து’’
(களவழி நாற்பது.36)
என வரும்.
தேரோர் வென்ற
கோமான் முன்தேர்க் குரவையும் - தேரின்கண்
வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பானே தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரொடு கை பிணைத்தாடுங் குரவையானும்;
உ-ம்:
‘‘சூடிய பொன்முடியும் பூணு மொளிதுளங்க வாடிய கூத்தரின் வேந் தாடினான் வீடிக் குறையாடல் கண்டு வந்து கொற்றப்போர் வாய்த்த விறையாட வாடாதார் யார்’’
‘‘விழவுவீற் றிருந்த
|