|
‘‘இவ்வே, பீலியணிந்து’’ என்னும் (95)
புறப்பாட்டும் அது.
அரும்பகை தாங்கும்
ஆற்றலானும் - வெலற்கரும் பகைவர் மிகையை நன்கு
மதியாது எதிரேற்றுக்கொள்ளும் அமைதியானும்;
உ-ம்:
‘‘எருதுகா லுறாஅ திளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் பசித்த பாண ருண்டுகடை தப்பலி னொக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச் சிறுபுல் லாளர் முகத்தவை கூறி வரகுகட னிரக்கு நெடுந்தகை யரசுவரிற் றாங்கும் வல்லா ளன்னே’’
(புறம்.327)
என வரும்.
‘‘களம்புக லோம்புமின்’’
என்னும் (87) புறப்பாட்டும் அது.
வாழ்க்கை
புல்லா வல்லாண் பக்கமும் - உயிர்வாழ்க்கையைப்
பொருந்தாத வலிய ஆண்பாலின் கூறுபாட்டானும்;
‘பக்க’மென்றதனாற்
தாபதப்பக்கமல்லாத போர்த்தொழிலாகிய
வல்லாண்மையே கொள்க.
உ-ம்:
‘‘கலிவர லூழியின் வாழ்க்கை கடிந்து மலிபுகழ் வேண்டு மனத்த - ரொலிகடல்சூழ் மண்ணகலம் வேண்டாது வான்வேண்டி யீண்டினார் புண்ணகலாப் போர்க்களத்துப் போந்து’’
(புறத்திரட்டு.1347.அமர்.3)
இப் பாரதத்துள் அது காண்க.
ஒல்லார்நாணப்
பெரியவர்க் கண்ணிச் சொல்லிய
வகையின் ஒன்றொடுபுணர்ந்து தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும்
பகைவர் நாணும்படியாக உயர்ந்தோரான் நன்குமதித்தலைக் கருதி இன்னது செய்யேனாயின் இன்னது செய்வலெனத் தான் கூறிய பகுதி யிரண்டனுள் ஒன்றனோடே பொருந்திப் பல பிறப்பினும் பழகி வருகின்ற உயிரை அங்கியங்கடவுட்குக் கொடுத்த அவிப்பலியானும்;
நாணுதலாவது
நம்மை அவன் செய்யாதே நாம் அவனை அறப்போர் செய்யாது வஞ்சனையான் வென்றமையான் அவன் தன்னுயிரை அவிப்பலி கொடுத்தானென
நாணுதல்.
உ-ம்:
‘‘எம்பியை வீட்டுத லெம்மனைக்கா யான்படுதல் வெம்பகன்முன் யான்விளைப்ப னென்றெழுந்தான் - றம்பி புறவோரிற் பாணிப்பப் பொங்கெரிவாய் வீழ்ந்தா னறவோன் மறமிருந்த வாறு’’
இப் பாரதத்துள் ஒருவன் இன்னது
செய்வலென்று அது செய்ய
முடியாமையின் அவிப்பலி கொடுத்தவாறு காண்க.
‘‘இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர்’’
(குறள்.779)
இதுவும் அது.
ஒல்லாரிடவயிற்
புல்லியபாங்கினும் - பகைவராயினும்
அவர் சுற்றமாயினும் வந்து உயிரும் உடம்பும் உறுப்பும்போல்வன வேண்டியக்கால் அவர்க்கவை மனமகிழ்ந்து கொடுத்து நட்புச் செய்தலானும்;
உ-ம்:
‘‘இந்திரன் மைந்த னுயிர்வேட் டிரந்திரவி மைந்தனை வெல்வான் வரங்கொண்டான் - றந்தநா ளேந்திலைவேன்
மன்னனே யன்றி யித
|