|
ற்குவந்த வேந்தனும் பெற்றான் மிகை’’
இப் பாரதத்துப் பகைவனாற் படுதலறிந்துந் தன் கவச குண்டலங் கொடுத்தமை கூறினமையிற் புல்லியபாங்காயிற்று. அது வீரம்பற்றிய கருணையாகலின் வாகையாயிற்று.
இத்துணையு மறத்திற்குக்
கூறியன.
பகட்டினானும்
மாவினானும் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும் - எருதும்
எருமையுமாகிய பகட்டினானும் யானையுங் குதிரையுமாகிய மாவினானுங் குற்றத்தினீங்குஞ் சிறப்பினான் அமைந்தோரது கூறுபாட்டானும்;
இவற்றான் உழவஞ்சாமையும்
பகையஞ்சாமையுமாகிய வெற்றி
கூறினார். பக்கமென்றதனாற் புனிற்றாவுங் காலாளுந் தேருங் கொள்க.
உ-ம்:
‘‘யானை நிரையுடைய தேரோ ரினுஞ்சிறந்தோ ரேனை நிரையுடைய வேர்வாழ்நர் - யானைப் படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டே ருடையோர்க் கரசரோ வொப்பு’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1159.குடிமரபு.9)
‘‘எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறைய னென்றனி ராயி னாறுசெல் வம்பலிர் மன்பதை மருள வரசுகளத் தவியக் கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை மீபிணத் துருண்ட தேயா வாழியிற் பண்ணமை தேரு மாவு மாக்களு மெண்ணற் கருமையி னெண்ணின்றோ விலனே கந்துகோ ளீயாது காழ்பல முருக்கி யுகக்கும் பருந்தி னிலத்துநிழல் சாடிச் சேண்பரன் முரம்பி னீர்ம்படைக் கொங்கர் ஆபரந் தன்ன செலவிற்பல் யானை காண்பலவன் றானை யானே’’
(பதிற்றுப்.77)
என்பதும் அது.
கட்டில் நீத்த
பாலினானும் - அரசன் அரசவுரிமையைக் கைவிட்ட
பகுதியானும்;
அது பரதனும்
பார்த்தனும் போல்வார் அரசு துறந்த வென்றி.
உ-ம்:
‘‘கடலு மலையுந் தேர்படக் கிடந்த மண்ணக வளாக நுண்வெயிற் றுகளினு நொய்தா லம்ம தானே யிஃதெவன் குறித்தன னெடியான் கொல்லோ மொய்தவ வாங்குசிலை யிராமன் றம்பி யாங்கவ னடிபொறை யாற்றி னல்லது முடிபொறை யாற்றலன் படிபொறை குறித்தே.’’
இஃது அரசு கட்டினீத்த பால்.
‘‘பரிதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநில மொருபக லெழுவ ரெய்தி யற்றே வையமுந் தவமுந் தூக்கிற் றவத்துக் கையவி யனைத்து மாற்றா தாதலிற் கைவிட் டனரே காதல ரதனால் விட்டோரை விடாஅ டிருவே விடாஅ தோரிவள் விடப்பட் டோரே’’
(புறம்.358)
என்பதும் அது.
எட்டுவகை நுதலிய
அவையத்தானும் - எண்வகைக் குணத்தினைக்
கருதிய அவையத்தாரது நிலைமையானும்;
அவை குடிப்
|