பிறப்பு
கல்வி ஒழுக்கம் வாய்மை
தூய்மை நடுவு நிலைமை அழுக்காறின்மை அவாவின்மை என விவை யுடையராய், அவைக்கண் முந்தியிருப்போர் வெற்றியைக்
கூறுதல்.
உ-ம்:
‘‘குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையிற் காத லின்பத்துத் தூங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலு மழுக்கா றின்மை யவாஅ வின்மையென விருபெரு நிதியமு மொருதா மீட்டுந் தோலா நாவின் மேலோர் பேரவை யுடன் மரீஇ யிருக்கை யொருநாட் பெறுமெனிற் பெறுக தில் லம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்பவிம் மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே’’
(ஆசிரியமாலை.புறத்திரட்டு.827.அவையறிதல் 11)
என இதனுள் எட்டும் வந்தன.
கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்-வேத முதலியவற்றாற் கட்டுதலமைந்த ஒழுக்கத்தொடு பொருந்திய
காட்சியானும்;
கண்ணதுதன்மை
கண்மையெனப் படுதலின் அதனைக் கண்ணுமை யென உகரங் கொடுத்தார். எண்மை வன்மை வல்லோர் என்பன எளுமை வலுமை வல்லுவோர்
என்றாற்போல.
இவை மனத்தான் இவ்வொழுக்கங்களைக் குறிக்கொண்டு ஐம்பொறியினையும் வென்று தடுத்தலாம். அவை இல்லறத்திற்கு உரியவாக நான்கு வருணத்தார்க்குங் கூறிய அடக்கமுடைமை, ஒழுக்க முடைமை, நடவுநிலைமை, பிறர்மனைநயவாமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறையுடைமை முதலியனவாம்.
உ-ம்:
‘‘ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து’’
(குறள்.126)
‘‘ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க முயிரினு மோம்பப் படும்’’
(குறள்.131)
‘‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி’’
(குறள்.118)
‘‘பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனொன்றோ வான்ற வொழுக்கு’’
(குறள்.148)
‘‘படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்’’
(குறள்.172)
‘‘அறங்கூறா னல்ல செயினு மொருவன் புறங்கூறான் என்ற லினிது
(குறள்.181)
‘‘தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு’’
(குறள்.201)
‘‘ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சுத் தழுக்கா றிலாத வியல்பு’’
(குறள்.161)
‘‘மிகுதியான் மிக்கவை
|