|
செய்தாரைத் தாந்தந் தகுதியான்
வென்று விடல்’’
(குறள்.158)
பிறவும் இந்நிகரனவெல்லாங் கொள்க.
‘‘விழையா வுள்ளம் விழையு மாயினுங் என்றுங், கேட்டவை தோட்டி யாக மீட்டாங் கறனும் பொருளும் வழாமை நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்னா கும்மே முன்னியது முடித்தல் இனைய பெரியோ ரொழுக்க மதனா லரிய பெரியோர்த் தேருங் காலை’’
(அகம்.286:8.13)
என இது தொகுத்துக் கூறியது.
இடையில் வண்புகழ்க்
கொடைமையானும் - இடையீ டில்லாத
வண்புகழைப் பயக்குங் கொடைமையானும்;
உலகமுழுதும்
பிறர்புகழ் வாராமைத் தன்புகழ் பரத்தலின்
‘இடையி’லென்றார்.
வண்புகழ்
- வள்ளிதாகிய புகழ்; அது வளனுடையதென விரியும்.
இக்கொடைப் புகழுடையான் மூப்புப் பிணி சாக்காட்டுக்கு அஞ்சாமை யின் அது
வாகையாம்.
உ-ம்:
‘‘மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே துன்னருஞ் சிறப்பி னுயர்ந்த செல்வ ரின்மையி னிரப்போர்க் கீஇ யாமையிற் றொன்மை மாக்களிற் றொடர்பறி யலரே தாடாழ் படுமணி யிரட்டும் பூநுத லாடியல் யானை பாடுநர்க் கருகாக் கேடி னல்லிசை வயமான்
றோன்றலைப்’’
தொ. பொ. நச். (1) 13
‘‘பாடி நின்றனெ னாகக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் னாடிழந் ததனின நனியின் னாதென வாள்தந் தனனே தலையெனக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையி னாடுமலி யுவகையொடு வருகுவ லோடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே’’
(புறம்.165)
என வரும். இது புறம்.
பிழைத்தோர்த்
தாங்குங் காவலானும் - தம்மைப் பிழைத்தோரைப்
பொறுக்கும் பாதுகாப்பானும்;
காவலாவது இம்மையும்
மறுமையும் அவர்க்கு ஏதம்வாராமற் காத்த
லாதலான், இஃது ஏனையோரின் வெற்றியாயிற்று.
உ-ம்:
‘‘தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயந்தா - லும்மை யெரிவாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று பரிவதூஉஞ் சான்றோர் கடன்’’
(நாலடி.58)
‘‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை’’
(குறள். பொறை 1)
என வரும்.
பொருளொடு
புணர்ந்த பக்கத்தானும் - அரசர்க்குரிய வாகிய படை
குடி கூழ் அமைச்சு
நட்பு முதலியனவும்
புதல்வரைப் பெறுவனவுமாகிய பொருட்டிறத்துப்பட்ட வாகைப்
பகுதியானும்;
‘பக்க’மென்றதனான் மெய்ப்பொரு ளுணர்த்துதலுங் கொள்க.
உ-ம்:
‘‘படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு’’
(குறள்.381)
நாடு அரண் முதலாகக்
கூறுவனவெல்லாந் திருவள்ளுவப் பயனிற்
காண்க.
|