|
இத்துணையும்
உரிப்பொருள் பெற்ற அகத்திணைக்குப்
புறங்கூறி, இஃது உரிப்பொருளல்லாத பெருந்திணைக்குப் புறனிது வென்கின்றது. இதனை வாகைக்குப் பின்வைத்தார். வீரக்குறிப்பு நிலையாமைக் குறிப்போடு உறவுடைத்து
என்றற்கு.
(இ-ள்.)
காஞ்சிதானே பெருந்திணைப் புறனே -
எழுதிணையுட்
காஞ்சிதானேயெனப் பிரிக்கப்பட்ட புறத்திணை பெருந்திணைக்குப் புறனாம்
எ-று.
அதற்கு
இது புறனாயவாறு என்னையெனின்,
எண்வகை மணத்தினும் நான்கு மணம்பெற்ற பெருந்திணை போல இக்காஞ்சியும் அற முதலாகியமும்
முதற்பொருளும் அவற்றது நிலையின்மையு மாகிய ஆறனுள்ளும்
நிலையின்மை மூன்றற்கும் உரித்தாய் எல்லாத் திணைகட்கும் ஒத்த மரபிற்றாகலானும்,
‘பின்னர் நான்கும்
பெருந்திணை பெறுமே’ (தொல். களவியல் 14) என்ற நான்குஞ்
சான்றோர் இகழ்ந்தாற்போல அறம் முதலியவற்றது நிலையின்மை யுணர்ந்து அவற்றை
அவர் இகழ்தலானும், ‘ஏறிய மடற்றிறம்’
(தொல்.அகத்.51) முதலிய நான்குந் தீய காமமாயினவாறு போல உலகிய னோக்கி நிலையாமையும்
நற்பொருளன்றாகலானும், உரிப்பொரு ளிடைமயங்கி வருதலன்றித் தனக்கு நிலமில்லாத பெருந்திணை போல அறம்பொருளின்பம் பற்றியன்றி வேறுவேறு நிலையாமை யென்பதொரு பொருளின்றாதல்
ஒப்புமையானும், பெருந் திணைக்குக் காஞ்சி
புறனாயிற்று. ‘கைக்கிளை முதலாப் பெருந் திணை யிறுவாய்’
(தொல். அகத். 1) ஏழனையும் அகமென்றலின், அவ்வகத்திற்கு
இது புறனாவதன்றிப் புறப்புறமென்றல் ஆகாமை யுணர்க. இது
மேலதற்கும் ஒக்கும். (22)
காஞ்சித் திணைது
பொதுவிலக்கணம்
|