| லைவியர்
பலரென்றற்கு, ஏகாரஞ் சுற்றத்திற் பிரித்தலிற்
பிரிநிலை.
இது செல்வமும்
இன்பமும் ஒருங்கு நிலையாமை கூறியது.
‘‘மழைகூர் பானாட் கழைபிணங் கடுக்கத்துப் புலிவழங் கதரிடைப் பாம்புதூங் கிறுவரை இருள்புக்குத் துணிந்த வெண்குவரற் கல்லளை யொருதனி வைகிய தனைத்தே பெருவளத்து வேனின் மூதூர்ப் பூநாறு நறும்பக லெழுதுசுவர் மாடத்துக் கிளையுடை யொருசிறை யவரின்று நிகழ்தரு முறவே யதனா லழுதுபனி கலுழ்ந்தவெங் கண்ணே யவ்வழி நீர்நீந்து பாவை யசைவது நோக்கிச் சேணிடை யகன்ற துயிலே யதுவினி யவருடைக் கனவோ டிவ்வழி யொருநாள் வாரா தாயினுய் யாதாங் கொல்லோ மெலிந்து மெலியுமென் யாக்கையிற் கழிந்த கழியுமென் னாருயிர் நிலையே’’
என வரும்.
‘‘கதிர்மூக்
காரல் கீழ்ச்சேற் றொளிப்ப’’
என்னும் (349)
புறப்பாட்டும் அது.
‘தாமே யேங்கிய’ என்பதற்குச் சிறைப்பட்டார் தாமே
தனித்திருந்ததென்று கூறிக்,
‘‘குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளிற் றப்பார் தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத் தீத்தணியத் தாமிரந் துண்ணு மளவை யீன்ம ரோவிவ் வுலகத் தானே.’’
(புறம்.74)
என்னும் புறப்பாட்டுக் காட்டுவாரும்
உளர்.
கணவனொடு
முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர்
செப்பிய மூதானந்தமும் - மனைவி தன்
கணவன் முடிந்தபொழுதே உடன் முடிந்து போகிய
செலவுநினைந்து கண்டோர் பிறர்க்
குணர்த்திய மூதானந்தத்தானும்;
ஆனந்தம் -
சாக்காடு. முதுமை கூறினார், உழுவலன்பு
பற்றி.
இப்படி யிறத்தலின் இது யாக்கை நிலையின்மை.
உ-ம்:
‘‘ஓருயி ராக வுணர்க வுடன்கலந்தார்க் கீருயி ரென்ப ரிடைதெரியார் - போரில் விடனேந்தும் வேலாற்கும் வெள்வளையி னாட்கும் உடனே யுலந்த துயிர்’’
(பு. வெ. சிறப்பிற் பொது.9)
என வரும்.
நனிமிகு
சுரத்திடைக் கணவனை இழந்து
தனிமகள் புலம்பிய முதுபாலையும், மிகுதி மிக்க அருநிலத்தே தன் கணவனை இழந்து தனித்த தலைமகள் தன் தனிமையை வெளிப்படுத்தின முதுபாலை யானும்;
‘புலம்பிய’
வெனவே அழுதல் வெளிப்படுத்தல்
கூறிற்று. பாலையென்பது பிரிவாகலின், இது பெரும்பிறிதாகிய பிரிவாதல் நோக்கி முதுபாலை யென்றார். ‘நனிமிகு சுர’மென்று இருகால் அதனருமை கூறவே, பின்பனிப் பிரிவு அதற்குச் சிறந்த தன்றாயிற்று.
இதுவும் இன்பமும்
செல்வமும் ஒருங்கு நிலையின்மை கூறிற்று.
‘‘இளையரு முதியரும் வேறுபுலம் படர வெடுப்ப வெழாஅய் மார்பமண் புல்ல விடைச்சுரத் திறுத்த மள்ள விளர்த்த வளையில் வறுங்கை யோச்சிக் கிளையு ளின்ன னாயின னிளையோ னென்று நின்னுரை செல்லு மாயின்
|