‘வழி’யென்பது
ஆகுபெயர். மெய்ப்பெயராவன
புறத்திணைக்குரிய பாட்டுடைத் தலைவர்
பெயரும் நாடும் ஊரும் முதலியனவாம்.
இதன்
கருத்துச் ‘சுட்டியொருவர் பெயர்கொளப்
பெறாஅர்’
(தொல். அகம்.54) என அகத்திணையியலுட்
கூறினமையிற், கிளவித்
தலைவன் பெயரை மெய்ப்பெயராகக்
கொள்ளாது, ஏனைப் புறத்
திணையாற்கொண்ட மெய்ப்பெயரிடம் பற்றி, அகத்திணைப் பொருள்
நிகழவும் பெறுமென்பதாம்.
உ-ம்:
‘‘அரிபெய்
சிலம்பின்’’ என்னும் (6) அகப் பாட்டினுள்
(6) தித்தனெனப் பாட்டுடைத்தலைவன் பெயரும், பிண்ட நெல்லினென நாடும், உறந்தையென ஊருங், காவிரியாடினை யென யாறுங்
கூறிப், பின்னர் அகப்பொருள் நிகழ்ந்தவாறுங் கொள்க.
‘மருங்கு’ என்றதனாற் பாட்டுடைத் தலைவன் பெயர் கூறிப் பின்னர்
நாடு முதலியன கூறல் மரபென்று கொள்க. அதுவும் அச்செய்யுளாற் பெற்றாம்.
‘‘நிலம்பூத்த மரமிசை நிமிர்பாலுங் குயிலெள்ள நலம்பூத்த நிறஞ்சாய நம்மையோ மறந்தைக்க கலம்பூத்த வணியவர் காரிகை மகிழ்செய்யப் புலம்பூத்துப் புகழ்பானாக் கூடலு முள்ளார்கொல்.’’
(கலி.27)
இதனுட் கூடலிடத்துத் தலைவி யென்பது
கூறினார்.
‘‘கன்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூற்றத் தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க வொன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற வென்வேலான் குன்றின் மேல்விளையாட்டும் விரும்பார்கொல்.’’
(கலி.27)
இதனுள் வென்வேலான் குன்றென மலை
கூறினார்.
‘‘திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நசைகொண்டு தந்நீழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம் இசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்’’
(கலி.26)
இதனுள் ஆறு கூறினார்.
‘‘புனவளர் பூங்கொடி’’
என்னும் (27) மருதக்கலியும் அது.
‘‘கரிய மலர்நெடுங்கட் காரிகைமுன் கடற்றெய்வங் காட்டிக்
காட்டி யரியசூள் பொய்த்தா ரறனிலரென் றேழையம்யாங்
கறிகோ
மைய விரிகதிர் வெண்மதியு மீன்கணமு மாமென்றே
விளங்கும்
வெள்ளைப் புரிவளையு முத்துங்கண் டாம்பல்
பொதியவிழ்க்கும்
புகாரே யெம்மூர்’’
(சிலப். கானல்.7)
இது முதலிய மூன்றும் புகாரிற்
றலைவியெனக் கூறியவாறு காண்க.
இன்னுஞ்
சான்றோர் செய்யுட்கண் இங்ஙனம் வருவன வெல்லாம் இதனான் அமைக்க. இக்கருத்தினாற் செய்யுள் செய்த சான்றோர் தமக்கும் பாடாண்தலைவர்கண் நிகழ்ந்த ஒருதலைக் காமமேபற்றி அகத்திணைச்
செய்யுள் செய்தாரேனும் ‘தம்மிசை பரந்துலகேத்த
வேதினாட்டுறைபவர்’ (கலி.26) என்று இவை பாடாண்டிணையெனப்
பெயர்பெறா என்றற்கு இது கூறினார்.
(32)
பிறப்பில்லாத் தெய்வங்களும்
பாடாண்டிணைக்குரியவாதல்
|