நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2462
Zoom In NormalZoom Out


ல்லு மென்றலு மியாவர்க்கு
மொல்லா தில்லென மறுத்தலு மிரண்டு
மாள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே
யொல்லா தொல்லு மென்றலு மொல்லுவ
தில்லென மறுத்தலு மிரண்டும் வல்லே
யிரப்போர் வாட்ட லன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயி லத்தை
யனைத்தா கியரினி யிதுவே யெனைத்துஞ்
சேய்த்துக் காணாது கண்டன மதனால்
நோயில ராகநின் புதல்வர் யானும்
வெயிலென முனியேன் பனியென மடியேன்
கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை
நாணல தில்லாக் கற்பின் வாணுதன்
மெல்லியற் குறுமக ளுள்ளிச்
செல்வ லத்தை சிறக்கநின் னாளே’’           (புறம்.196)

‘‘புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
யிகழ்வாரை நோவ தெவன்’’                (குறள்.237)

இவை கொடாஅர்ப் பழித்தல்

‘‘களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின் பனுவற் பாண ருய்த்தெனக்
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
வீகை யரிய விழையணி மகளிரொடு
சாயின் றென்ப வாஅய் கோயில்
சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில்
பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி
யுரைசா லோங்குபுக ழொரீஇய
முரசுகெழு செல்வர் நகர்போ லாதே’’         (புறம்.127)

இஃது ஆயைப் புகழ்ந்து ஏனைச் செல்வரைப் பழித்தது.

‘‘மின்னுந் தமனியமும் வெற்றிரும்பு மொன்றாகிப்
பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே கொன்னே
யொளிப்பாரு மக்களா யொல்லுவ தாங்கே
யளிப்பாரு மக்களா மாறு’’

            (பெரும்பொருள் விளக்கம்.புறத்திரட்டு 228)

இதுவும் அது.

அடுத்து  ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும் - தலைவனெதிர்
சென்று ஏறி   அவன் செய்தியையும் அவன் குலத்தோர் செய்தியையும்
அவன்மேலே ஏற்றிப் புகழ்ந்த இயன்மொழி வாழ்த்தும்;

என்றது,       இக்குடிப்பிறந்தோர்க்கெல்லாம்      இக்குணங்கள்
இயல்பென்றும்,   அவற்றை  நீயும்  இயல்பாக  உடையை  யென்றும்,
அன்னோர்  போல எமக்கு நீயும் இயல்பாக ஈ யென்றும்  உயர்ந்தோர்
கூறி  அவனை  வாழ்த்துதலின் இயன்மொழி வாழ்த்தாயிற்று.  இதனை
உம்மைத்தொகையாக்கி  இயன்மொழியும் வாழ்த்துமென  இரண்டாக்கிக்
கொள்க.

இஃது  ஒருவர்  செய்தியாகிய  இயல்பு   கூறலானும்   வண்ணப்
பகுதியின்மையானும் பரவலின் வேறாயிற்று.

உ-ம்:

‘‘மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
யொலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார்
பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை யுருகெழு முரசம்
மண்ணி வாரா வளவை யெண்ணெய்
நுரை