|
வடக்குந் தெனாஅ துருகெழு குமரியின் தெற்குங் குணாஅது, கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்குங் கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டி னீர்நிலை நிவப்பின் கீழு மேல தானிலை யுலகத் தானு மானாது உருவும் புகழு மாகி விரிசீர்த் தெரிகோல் ஞமன்ன் போல வொருதிறம் பற்ற லிலியரோ நிற்றிறஞ் சிறக்க செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக் கடற்படை குளிப்ப மண்டி யடர்புகர்ச் சிறுகண் யானை செவ்விதி னேவிப் பாசவற் படப்பை யாரெயில் பலதந் தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம் பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப் பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே யிறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே வாடுக விறைவநின் கண்ணி யொன்னார் நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே யாங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய தண்டா வீகைத் தகைமாண் குடுமி தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுட ரொண்கதிர் ஞாயிறு போலவும் மன்னிய பெருமநீ நிலமிசை யானே’’
(புறம்.6)
இதனுள் இயல்பாகிய
குணங்கூறி அவற்றொடு செவியுறையுங் கூறினார்,
செவியுறைப் பொருள் சிறப்புடைத்தென்று அவன் கருதி வாழ்தல்
வேண்டி.
ஆவயின் வரூஉம்
புறநிலை வாழ்த்தும் - தெய்வ வழிபாடு
உடைத்தாயினும் மக்கள் கண்ணதேயாகித் தோன்றும் பாட்டுடைத் தலைவன் முன்னிலையாகத் தெய்வம் படர்க்கையாக வாழ்த்தும் வாழ்த்தும்;
தெய்வஞ்
சிறந்ததேனும் மக்கள் அதிகாரப்படுதலின்
அவர் கண்ணதேயாதற்கு ‘ஆவயின் வரூஉம்’ என்றார்.
இதற்கு ‘வழிபடு தெய்வம்’ என்னும் செய்யுளியற் (110) சூத்திரப் பொருளை யுரைக்க.
இதுவுந் தலைவன்
குறிப்பின்றித் தெய்வத்தான் அவனை வாழ்விக்கும் ஆற்றலுடையார் கண்ணதாகலிற் கைக்கிளைப் புறனாயிற்று.
உ-ம்:
‘‘கண்ணுதலோன் காப்பக் கடன்மேனி மால்காப்ப வெண்ணிருதோ ளேந்திழையா டான்காப்பப் - பண்ணியனூற் சென்னியர்க் களிக்குந் தெய்வநீ மன்னுக நாளுமிம் மண்மிசை யானே’’
(பெரும்பொருள் விளக்கம் கடவுள்
வாழ்த்து.புறத்திரட்டு.1501)
என வரும்.
கைக்கிளை
வகையோடு உளப்படத் தொகைஇ -
|