| யிற்று.
உ-ம்:
‘‘அந்தண ராவொடு
பொன்பெற்றார் நாவலர் மந்தரம்போன் மாண்ட களிறூரந்தார் - எந்தை யிலங்கிலைவேற் கிள்ளி யிரேவதிநா ளென்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு.’’
(முத்தொள்.40)
இது சிலம்பி
கூடிழக்குந்துணை அடங்கலும் வெளியாயிற்றென்றலின்
வெள்ளணியாயிற்று.
‘‘செய்கை யரிய களவழிப்பா முன்செய்த பொய்கை யொருவனாற் போந்தரமோ - சைய மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்தி கொலைச்சிறைதீர் வேத்துக் குழாம்’’
இது சிறைவிடுதல் கூறிற்று.
‘‘கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர் பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் - நண்ணாதீர் தேர்வேந்தன் தென்னன் திருவுத்த ராடநாட் போர்வேந்தன் பூச லிலன்’’
(முத்தொள்.39)
இது செருவொழிந்தது.
‘‘ஏமாரு மன்னீ ரெயிறிறமி னெங்கோமான் வாமான்றேர்க் கோதை சதயநாள் - ஆமாறு காம நுகருமின் கண்படுமி னென்னுமே யேம முரசின் குரல்’’
இதனுள் இழிகுலத்தோன்
பறைசாற்றினமை கூறுதலின் இழிந்தோர்
கூறுதல் ஒழிந்த மங்கலங்கட்கும் ஒக்கும். பெருமங்கல மென்றதனானே
பக்கநாளுந் திங்கடோறும் வரும் பிறந்த நாளும் பாடலுட் பயிலாமை யுணர்க.
சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும் - அரசர்க்குச் சிறப்பெய்திய மிக்க புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து
ஆடும் நீராட்டு மங்கலமும்;
இதனைப்
பிறந்தநாளின் பின்வைத்தார்,
பொன்முடி புனைந்த ஞான்று தொடங்கி யாண்டுதோறும் இது வருமென்றற்கு. குறுநில மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தொடு கூடிய மண்ணு
மங்கலமும் கொள்க. உ-ம்:
‘‘அளிமுடியாக் கண்குடையா னாகுதிநாள் வேய்ந்த வொளிமுடி பொன்மலையே யொக்கு - மொளிமுடிமேன் மந்திரத்தா லந்தணர் வாக்கியநீ ரம்மலைமே லந்தரத்துக் கங்கை யனைத்து’’
என வரும்.
இதனானே யாண்டு
இத்துணைச் சென்றதென்று
எழுதும்
நாண்மங்கலமும் பெறுதும்.
நடைமிகுத்து ஏத்திய
குடைநிழன் மரபும் - உலக வொழுக்கத்தை
இறப்ப உயர்த்துப் புகழ்ந்து கூறப்பட்ட குடைநிழல
திலக்கணமும்;
இங்ஙனம்
புனைந்துரைத்தற்கு ஏதுவாயது நிழலாம்; என்னை? அந்நிழல் உலகுடனிழற்றியதாகக் கூறுதலும்பட்டுக் குடி புறங்காத்தற்குக் குறியாகக் ‘குடைகொண்டே’ னென்று அக் கொற்றவன் குறிக்கவும் படுதலின்.
மரபென்றதனாற்
செங்கோலுந் திகிரியும்
போல்வனவற்றைப்
புனைந்துரை
|