| யாக்கலுங் கொள்க.
உ-ம்:
‘‘மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத் திங்க ளதற்கோர் திலதமாம் - எங்கணும் முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே கொற்றப் போர்க் கிள்ளி குடை’’
(முத்தொள்.35)
என வரும்.
‘‘அறநீர்மை தாங்கி யளப்பரிதாய் வானப் புறநீர்போன் முற்றும் பொதியும் - பிறரொவ்வா மூவேந்த ருள்ளு முதல்வேந்தன் முத்தமிழ்க்குக் கோவேந்தன் கண்டான் குடை’’
எனவும்,
‘‘ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றா அங்குக் கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை வெயின்மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ’’
(புறம்.35)
எனவும்,
‘‘திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதுங் கொங்கலர் தார்ச்சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கணுலகளித்த லான்’’
(சிலப். மங்கல. 1)
எனவும்,
‘‘திங்கண் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ
லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி’’
(சிலப். கானல்வரி)
‘‘ஞாயிறு போற்றுது ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான்’’
(சிலப். மங்கல)
எனவும் இவை
குடையையும் செங்கோலையுங்
திகிரியையும்
புனைந்தன.
மாணார்ச்
சுட்டிய வாண்மங்கலமும் - பகைவரைக் குறித்த வாள் வென்றியாற்
பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும்
வாண்மங்கலமும்;
இது பிறர்
வாழ்த்தப்படுதலிற் கொற்றவையைப்
பரவும் ‘வென்றவாளின் மண்’ (புறம்.68) என்பதனின் வேறாயிற்று.
புகழ்ச்சிக்கட் பகைவரை இகழ்ந்து புகழ்தலின்
‘மாணார்ச் சுட்டிய’ என்றார்.
உ-ம்:
‘‘ஆளி மதுகை யடல்வெய்யோன் வாள்பாடிக் கூளிகள் வம்மினோ கூத்தாடக் - காளிக்குத் தீராத வெம்பசி தீர்த்துநாஞ் செங்குருதி நீராட்டி யுண்ட நிணம்’’
என வரும்.
‘‘அரும்பவிழ்தார்க் கோதை யரசெறிந்த வொள்வாள் பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு வண்டாடும் பக்கமு முண்டு குறுநரி யுண்டாடும் பக்கமு முண்டு’’
(முத்தொள்.38)
இது பிறர் கூறியது.
இது பரணியிற்
பயின்றுவரும்.
மன்னெயில் அழித்த
மண்ணு மங்கலமும் - மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையேரான் உழுது வெள்ளைவரகுங் கொள்ளும் வித்தி மங்கலமல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடு மங்கலமும்;
அழித்ததனான்
மண்ணுமங்கலம்.
உ-ம்:
‘‘கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்’’
(புறம்.15)
என எயிலழித்தவாறு கூறி,
‘‘வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூப நட்ட’’
(புறம்.15, 20 -1)
எனவே, ஒருவாற்றான் மண்ணியவாறுங் கூறியவாறு
காண்க.
குடுமிகொண்ட மண்ணுமங்கலம்
எயிலழித்தல் கூறாமையின் இ
|