நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2478
Zoom In NormalZoom Out


பெரிதுபெற்றுச் சிறிது தந்தவற்குக் காட்டிய விடை.

‘‘வேழம்  வீழ்த்த  விழுத்தொடைப்  பகழி’’  என்னும்  (152)
புறப்பாட்டு இடைநிலத்திற் பரிசுபெற்றமை கண்பார்க்குக் கூறியது.

‘‘நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்
பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்குங்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும்
எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமண னல்கிய வளனே’’        (புறம்.163)

இது மனைவிக்குக் கூறியது.

நாளும்  புள்ளும்   பிறவற்று   நிமித்தமும் அச்சமும் உவகையும்
எச்சமின்றிக்  காலங்கண்ணிய  ஓம்படை  உளப்பட  -  நாணிமித்தத்
தானும்        புண்ணிமித்தத்தானும்       பிறவற்றினிமித்தத்தானும்
பாடாண்டலைவர்க்குத்  தோன்றிய  தீங்குகண்டு  அஞ்சிய  அச்சமும்
அது  பிறத்தற்குக்  காரணமாகிய  அன்பும்  ஒழிவின்றிப் பரிசிலர்க்கு
நிகழ்தலின்   அவர்   தலைவர்   உயர்வாழும்  காலத்தைக்  கருதிய
பாதுகாவன் முற் கூறியவற்றோடே கூட.

ஒருவன்  பிறந்த  நாள்வயின்  ஏனைநாள்பற்றிப்   பொருந்தாமை
பிறத்தலும்,  அவன்  பிறந்த  நாண்மீனிடைக்  கோண்மீன் கூடியவழி
அவன்   நாண்மீனிடைத்   தீது  பிறத்தலும்,  வீழ்மீன்  தீண்டியவழி
அதன்கண்   ஒரு   வேறுபாடு  பிறத்தலும்  போல்வன  நாளின்கண்
தோன்றிய   நிமித்தம்.  ‘‘புதுப்புள் வருதலும் பழம்புட் போதலும்’’
(புறம்.20)  பொழுதன்றிக்   கூகை  குழறலும்  போல்வன புள்ளின்கண்
தோன்றிய   நிமித்தம்;   ஓர்த்து  நின்றுழிக்  கேட்ட  வாய்ப்புள்ளும்
ஓரிக்குர லுள்ளிட்டனவுங், கழுதுடன் குழீஇய குரல்பற்றலும் வெஞ்சுடர்
மண்டிலத்துக்  கவந்தம்   வீழ்தலும்  அதன்கண்  துளைதோன்றுதலுந்
தண்சுடர்  மண்டிலம் பகல் நிலவெறித்தலும் போல்வன பிறவற்றுக்கண்
தோன்றிய நிமித்தம்.

உவமை  -   அன்பு.   இந்நிமித்தங்கள்  பிறந்துழித் தான் அன்பு
நிகழ்த்தினான்  ஒரு  பாடாண்டலைவனது   வாழ்க்கை நாளிற்கு ஏதம்
வருங்கொலென்று  அஞ்சி  அவற்குத்  தீங்கின்றாகவென்று  ஓம்படை
கூறுதலின்  அது  ‘காலங்கண்ணிய  ஓம்படை’ யாயிற்று. எஞ்ஞான்றுந்
தன்  சுற்றத்து  இடும்பை  தீர்த்தானொருவற்கு இன்னாங்கு  வந்துழிக்
கூறுதலின்,   இற்றைஞான்று   பரிசிலின்றேனும்    முன்னர்ப்  பெற்ற
பரிசிலை நினைந்து கூறினானாமாகவே கைக்கிளைக்குப் புறனாயிற்று.