ன்றும்
வழக்கினது கருத்தினானே
மூன்று காலத்தொடும் பொருந்தக் கருதுமாற்றான் வரும் மேற்கூறி வருகின்ற பாடாண்டிணை எ-று
என்றது, இவ்வழக்கியல்
காலவேற்றுமை பற்றி வேறுபடுமாயின்,
அவையும் இப்பொருள்களின் வேறுபடா என்பதுண்ர்த்தியவாறு.
அவை, பகைவர்நாட்டுப் பார்ப்பார் முதலியோரை ஆண்டு நின்றும் அகற்றிப் பொருதல் தலையாய அறம்; அதுவன்றிப் பொருள் கருதாது பாதுகாவாதான் நிரையைத் தான் கொண்டு பாதுகாத்தல் அதனினிழிந்த இடையாய
அறம்; அதுவன்றிப் பிறர்க்கு அளித்தற்கு நிரைகோடல் நிகழினும்,
அஃது அதனினுமிழிந்த கடையாய அறமெனப்படும். இனிப் பகைவன் போற்றாத நாட்டைக் கைக்கொண்டு தான் போற்றச் சேறலும், பொருள் வருவாய் பற்றிச் சேறலும், வஞ்சித்துச் சேறலும்
போல்வன ஒன்றனின் ஒன்றிழிந்த ஞாலத்து நடக்கைக் குறிப்பு.
மாற்றரசன் முற்றியவழி ஆற்றாதோன் அடைத்திருத்தலும்
அரசியலாயினும், அவன் வென்றியுள்ளமொடு வீற்றிருத்தலுந்,
தனக்கு உதவிவர வேண்டி யிருத்தலும், ஆற்றலின்றி ஆக்கங்கருதாது
காத்தேயிருத்தலும் ஒன்றனினொன்றிழிந்த நடக்கைக் குறிப்பு
இனி வாகைக்குப்
பார்ப்பன ஒழுக்க முதலியன நான்கற்கும் வேறுபட வருதலுங் கொள்க. காஞ்சிக்கும் அவரவர் அறிவிற்கேற்ற நிலையாமை கொள்க. உயிரும் உடம்பும் பொருளுமென்ற
மூன்றும் பற்றி. இது பாடாண்டிணையுட் கூறினார், எல்லாத் திணைக்கும் புறனடையாதல் வேண்டி. இனிக் கடவுள் வாழ்த்திற்குத் தலை இடைகடைகோடலும், அறுமுறை வாழ்த்திற்கும் அவற்றின் ஏற்றிழிவு பற்றிக்கோடலும், பிறவுஞ் சான்றோர் செய்யுட்கண் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. முற்கூறியன
வெல்லாம் ஓம்படையுளப்படக் கண்ணிய வருமென்பது.
இரண்டாவது புறத்திணையியற்கு, மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த காண்டிகையுரை
முடிந்தது.
|