|
மெலிதல் - அங்ஙனம் உள்ளுதல் காரணத்தான் உடம்பு வாடுதல்;
ஆக்கஞ் செப்பல் - யாதானும் ஓர் இடையூறு கேட்டவழி அதனை ஆக்கமாக நெஞ்சிற்குக் கூறிக் கோடல்; நாணுவரையிறத்தல் - ஆற்றுந் துணையும் நாணி அல்லாதவழி அதன்வரையிறத்தல்; நோக்குவ எல்லாம் அவையே போறல் - பிறர் தம்மை நோக்கிய நோக்கெல்லாந் தம் மனத்துக் கரந்து ஒழுகுகின்றவற்றை அறிந்து நோக்குகின்றாரெனத் திரியக்கோடல்; மறத்தல் - விளையாட்டு முதலியவற்றை மறத்தல்; மயக்கம் - செய்திறன் அறியாது கையற்றுப் புள்ளும் மாவும் முதலியவற்றொடு கூறல்; என்று அச்சிறப்பு உடை மரபினவை களவு என மொழிப - என்று சொல்லப்பட்ட அந்தச் சிறப்புடைத்தான முறையினையுடைய ஒன்பதுங் களவொழுக்கமென்று கூறுப எ-று.
இயற்கைப் புணர்ச்சிக்கு இயைபுடைமையின் வேட்கை முற்கூறினார்.
சேட்படுத்தவழித் தலைவன் அதனை அன்பென்று கோடலும்,
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கியவழித் தலைவி அதனை அன்பென்று கோடலும் போல்வன ஆக்கஞ்செப்பல். தலைவன் பாங்கற்குந் தோழிக்கும் உரத்தலுந், தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றலும் போல்வன நாணுவரையிறத்தல். களவதிகாரமாதலின் அவையென்னுஞ் சுட்டுக் களவை உணர்த்தும். கையுறைபுனைதலும் வேட்டைமேலிட்டுக் காட்டுள்திரிதலுந் தலைவற்கு மறத்தல்; கிளியும் பந்தும் முதலியன கொண்டு விளையாடுதலைத் தவிர்ந்தது தலைவிக்கு மறத்தல். சாக்காடாவன:
“அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரெங் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.” (குறுந்.49)
“நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்
பயனின் மையிற் பற்றுவிட் டொரூஉம்
நயனின் மாக்கள் போல வண்டினஞ்
சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர
மையன் மானினம் மருளப் பையென
வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப
ஐயறி வகற்றுங் கையறு படரோடு
அகலிரு வானம் அம்மஞ் சீனப்
பகலாற்றுப் படுத்த பழங்கண் மாலை
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக
ஆரஞர் உறுநர் அருநிறஞ் சுட்டிக்
கூரெஃ கெறிஞரின் அலைத்தல் ஆனாது
எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத்து
உள்ளூ
|