நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2495
Zoom In NormalZoom Out


 

றாயுற்ற  துன்பத்துநின்று   நாமே   நீங்குதற்கெய்திய   பிரிவரிதாகிய
காமத்துடனே     இருவர்க்கும்     உயிர்போவதாக,    இஃதெனக்கு
விருப்பமென்றான்;  என்பதனான்  தந்நிலையுரைத்தலும்  பிரிவச்சமுங்
கூறிற்று.

“குவளை நாறுங் குவையிருங் கூந்தல்
ஆம்பல் நாறுந் தேம்பொதி துவர்வாய்க்
குண்டுநீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண்பஃறுத்தி மாஅ யோயே
நீயே, அஞ்ச லென்றஎன் சொல்லஞ் சலையே
யானே, குறுங்கால் அன்னங் குவவுமணற் சேக்குங்
கடல்சூழ் மண்டிலம் பெறினும்
விடல்சூ ழலெனால் நின்னுடை நட்பே.”       (குறுந்.300)

இது நயப்பும் பிரிவச்சமும் வன்புறையுங் கூறிற்று.

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதுஞ்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.”        (குறுந்.40)

இது பிரிவரெனக் கருதிய தலைவி குறிப்புணர்ந்து தலைவன் கூறியது.

“மெல்லியல் அரிவைநின் நல்லகம் புலம்ப
நிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந்து
இரவலர் வாரா வைகல்
பலவா குகயான் செலவுறு தகவே.”           (குறுந்.137)

“அறத்தா, றன்றெனமொழிந்த தொன்றுபடுகிளவி
யன்ன வாக வென்னுநள் போல.”             (அகம்.5)

இவை தெளிவகப்படுத்தல்.

“அம்மெல் ஓதி விம்முற் றழுங்கல்
எம்மலை வாழ்ந ரிரும்புனம் படுக்கிய
அரந்தின் நவியத் தறுத்த சாந்தநும்
பரந்தேந் தல்குல் திருந்துதழை யுதவும்
பண்பிற் றென்ப வண்மை அதனால்
பல்கால் வந்துநம் பருவரல் தீர
அல்கலும் பொருந்துவ மாகலின்
ஓல்கா வாழ்க்கைத் தாகுமென் உயிரே.”

இதுவும்  அணித்து  எம்மிடமென  ஆற்றுவித்தது.  பயின்றெனவே,
பயிலாதுவரும்   ஆயத்துய்த்தலும்,   யான்  போவலெனக்  கூறுதலும்
மறைந்து  அவட்காண்டலுங்,  கண்டு  நின்று அவணிலை கூறுவனவும்,
அவளருமை   யறிந்து   கூறுவனவும்   போல்வன  பிறவுங்  கொள்க.
“யான்றற் காண்டொறும்” என்னுஞ் செய்யுளுள்,

“நீயறிந் திலையால் நெஞ்சே
யானறிந் தேனது வாயா குதலே.”

என  மறைந்து  அவட்கண்டு  நின்று தலைவன் அவளொடு நிகழ்ந்தது
நினைஇ நெஞ்சிற்குக் கூறியது.

“காணா மரபிற்று உயிரென மொழிவோர்
நாணிலர் மன்ற பொய்ம்மொழிந் தனரே
யாஅங் காண்டுமெம் அரும்பெறல் உயிரே
சொல்லும் ஆடும் மென்மெல வியலும்
கணைக்கால் நுணுகிய நுசுப்பின்