|
மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே.”
ஆயத்தொடு போகின்றாளைக் கண்டு கூறியது. இதன்கண்
ஆயத்துய்த்தமையும் பெற்றாம்.
இனி ‘வேட்கை யொருதலை’ (தொல்.பொ.100) என்னுஞ்
சூத்திரத்திற் கூறியவற்றை மெய்யுறு புணர்ச்சி மேல் நிகழ்த்துதற்கு
அவத்தை கூறினாரென்றும் இச்சூத்திரத்தைத் தலைவியை நோக்கி
முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர் இயற்கைப் புணர்ச்சி புணருமென்றுங்கூறுவாரும் உளர். அவர் அறியார்; என்னை? ஈண்டு அவத்தை கூறிப் பின்னர்ப் புணர்ச்சி நிகழுமெனின் ஆண்டுக் கூறிய (261-263) மெய்ப்பாடு பன்னிரண்டும் வேண்டாவாம். அன்றியும், ஆறாம் அவதி கடந்து வருவன அகமன்மை மெய்ப்பாட்டியலிற் கூறலிற் பத்தாம் அவத்தையாகிய சாக்காடெய்தி மெய்யுறுபுணர்ச்சி நடத்தல் பொருந்தாமையுணர்க. இனித் தலைவியை முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர்ப் புணருமெனின் முன்னர்க் ‘கூட்டி
யுரைக்குங் குறிப்புரை யாகும்” (தொல்.பொ.96) எனக் கண்ணாற்
கூறிக் கூடுமென்றலும் ‘இருகையு மெடுத்தல்’ (தொல்.பொ.263) எனப்
பின்பு கூறுதலும் பொருந்தாவாம். அன்றியும், நயப்பும் பிரிவச்சமும்
வன்புறையும் கூறிப் பிரியவேண்டுதலானும் அது பொருந்தாதாம். (10)
இடந்தலைப்பாடு முதலியன உணர்த்தல்
102. மெய்தொட்டுப் பயிறல் பொய்பா ராட்டல்
இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்
நீடுநினைந் திரங்கல் கூடுத லுறுதல்
சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்
தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇப்
பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்
பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும்
நிற்பவை நினைஇ நிகழ்பவை யுரைப்பினுங்
குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்
பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும்
ஊரும் பேரும் கெடுதியும் பிறவும்
நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித்
தோழியைக் குறையுறும் பகுதியுந் தோழி
குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்
தண்டாது இரப்பினும் மற்றைய வழியுஞ்
சொல்லவட் சார்தலிற் புல்லிய வகையினும்
அறிந்தோ ளயர்ப்பின் அவ்வழி மருங்கின்
கேடும் பீடும் கூறலுந் தோழி
நீக்கலி னாகிய நிலைமையும் நோக்கி
மடன்மா கூறும் இடனுமா ருண்டே.
இது மேல் இயற்கைப்புணர்ச்சிப் பகுதியெல்லாங் கூறி அதன்
வழித் தோன்றும் இடந்தலைப்பாடும் அதன்வழித் தோன்றும் பாங்கற்
கூட்டமும் அவற்றுவழித் தோன்றுந்
|