|
மெல்லிலைப் பரப்பின் விருந்துண வொருவன்”
(அகம்.110:11-2)
எனத் தலைவன் இரவுக்குறி வேண்டியதனைத் தோழி கூறியவாறு
காண்க. இன்னும் ‘இரட்டுறமொழிதல்’ என்பதனான், ‘தண்டாது’
என்பதற்குத் தவிராது இரப்பினு மெனப் பொருள்கூறிக், கையுறை கொண்டுவந்து கூறுவனவும், நீரேவுவன யான் செய்வேனெனக் கூறுவனவுந், தோழி நின்னாற் கருதப்படுவாளை அறியேனென்றுழி அவன் அறியக்கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக.
உ-ம்:
“கவளக் களியியன்மால் யானைசிற் றாளி
தவழத்தா னில்லா ததுபோல் - பவளக்
கடிகை யிடைமுத்தம் காண்டொறு நில்லா
தொடிகை யிடைமுத்தம் தொக்கு.” (திணை.நூற்.42)
நின் வாயிதழையும் எயிற்றையும் காணுந்தோறும் நில்லா என் கையிடத்தில் இருக்கின்ற பவளக்கொடியும் முத்தும் என்க.
“நறவுக்கமழ் அலரி நாற வாய்விரிந்து
நிறந்திகழ் கமழு மிணைவாய் நெய்தல்
கண்ணித் தலையர் கருங்கைப் பரதவர்
நின்னைய ரல்லரோ நெறிதா ழோதி
ஒண்சுணங் கிளமுலை யொருஞான்று புணரின்
நுண்கயிற் றுவலை நுமரொடு வாங்கிக்
கைதை வேலி யிவ்வூர்ச்
செய்தூட் டேனோ செறிதொடி யானே”
“அறிகவளை யைய விடைமடவா யாயச்
சிறிதவள்செல் லாளிறுமென் றஞ்சிச் - சிறிதவ
ணல்கும்வாய் காணாது நைந்துருகி யென்னெஞ்சம்
ஒல்கும்வா யொல்க லுறும்” (திணை.நூற்.17)
என வரும்.
மற்றைய வழியும் - குறியெதிர்ப்பட்டுங் கையுறை மறுக்கப்பட்டுங்
கொடுக்கப்பெற்றும் இரந்து பின்னின்றான், அங்ஙனங் குறியெதிர்ப் பாடின்றி ஆற்றானாய் இரந்து பின்னிற்றலை மாறுமவ்விடத்தும்:
உ-ம்:
“நின்வாய் செத்து நீபல உள்ளிப்
பெரும்புன் பைதலை வருந்த லன்றியும்
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலைநாண் மாமலர் தண்டுறைத் தயங்கக்
கடல்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற்
றறல்வார் நெடுங்கயத் தருநிலை கலங்க
மாலிருள் நடுநாட் போகித் தன்னையர்
காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்
கவ்வாங் குந்தி அஞ்சொற் பாண்மகள்
நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில்
பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்
கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயங்கெழு வைப்பிற் பல்வே லெவ்வி
நயம்புரி நன்மொழி யடக்கவு மடங்கான்
பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித்
திதியனொடு
|